Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேகமாக வளரும் உள்ளூர் பிராண்டுகள்!

இன்று உள்ள வியாபார சந்தையில் எந்த போட்டியுமின்றி தேசிய மற்றும் சர்வதேச பிராண்டுகளின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் உள்ளூர் மர்க்கெட்டுகளில்  உள்ளூர் பிராண்டுகள் தான் அதிகம் ஆக்கிரமிக்கின்றன. சுய உதவிகுழுக்களாலும்,உள்ளூர் சிறு தொழில் நிறுவனங்களாலும் தயாரிக்கப்படும் பொருட்கள் உள்ளூர் கடைகளில் அதிகம் விரும்பப்படுகிறது.
தேசிய, சர்வதேச பிராண்டுகளை போல் வண்ண தோற்றமளிக்கும் பொருட்கள்  இல்லாவிட்டாலும் குறைந்த விலை, அதிக தரம் என்கிற அடிப்படையில் இந்த உள்ளூர் பிராண்டுகள் முன்னனி வகிக்கின்றன.இதில் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது உள்ளூர் பிராண்டுகளால் கிராமத்தின் கடைசி பகுதிவரை சென்று பொருட்களை மார்க்கெட் செய்ய முடியும் என்ற அடிப்படையில் தேசிய, சர்வதேச பிராண்டுகளின் ஊடுறுவல் சற்று குறைந்தே காணப்படுகிறது. இதன் மூலம் உள்ளூர் மற்றும் கிராமப்புர மார்க்கெட்டுகளை குறிவைக்கும் பிராண்டுகளுக்கு இந்த உள்ளூர் பிராண்டுகள் சவாலாக அமையும்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ