Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டீல் உற்பத்தி இந்தியாவில் அதிகரிப்பு!

ஸ்டீல் உற்பத்தி செய்யும் நாடுகளில் 2012-வுடன் ஒப்பிடும் போது, 2013ல் சில முன்னணி நாடுகளில் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. குறிப்பாக அடிப்படை உலோகங்களை அதிகளவில் உபயோகப்படுத்தும் நாடான சீனாவில் 2012ம் ஆண்டு 779 மெகாடன் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் கடந்த 2013ல் 724.7 மெகாடன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  எனினும் மொத்த உற்பத்தி அதிகரித்துள்ளது. 2012ல் 1,552.9 மெகாடன்னாக இருந்த உற்பத்தி, 2013ல் 1,607.2 மெகாடன்னாக அதிகரித்துள்ளது.
ஜப்பானில் ஸ்டீல் உற்பத்தி முந்தைய ஆண்டை விட 110.6 மெகாடன்னாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவிலும் 81.2 மெகாடன்னாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 77.3 மெகாடன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ