Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 222 புள்ளிகள் வீழ்ச்சி!

தொடர்ந்து நான்காவது நாளாக இந்திய பங்கு சந்தைகள் சரிவில் உள்ளன. மேலும் அமெரிக்க ஃபெடரல் வங்கி மாத மாதம் வழங்கும் கடன் பத்திர அளவில் குறைக்கப்படலாம் என்ற எண்ணம் வர்த்தகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதையடுத்து எஃப்.அண்ட்.ஓ எக்ஸ்பெய்ரி எனபதால் இந்திய பங்கு சந்தைகள் நான்காவது நாளாக இன்று (30-01-2014) சரிவில் உள்ளன. குறிப்பாக சென்செக்ஸ் 222  புள்ளிகள் சரிந்து 20,424 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 68 புள்ளிகள் குறைந்து 6,052 ஆக உள்ளது.
 
 
குறிப்பாக சேசா ஸ்டெர்லைட் நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் குறைந்தும், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் பங்கின் விலை 2 சதவிகிதம் குறைந்தும், ஆக்ஸிஸ் பேங்க் மற்றும் ஹிந்துஸ்தான் ஜிங்க், இன்ஃபோஸிஸ் நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் குறைந்தும் உள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP