Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டி.வி.எஸ் நிகர வருவாய் ரூ. 2.035 கோடியாக ஏற்றம்!

டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்&டிசம்பர்) ரூ.69 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.52.45 கோடியாக இருந்தது. நிகர வருவாய் ரூ.1,803 கோடியிலிருந்து ரூ.2,035 கோடியாக உயர்ந்துள்ளது.

மூன்றாவது காலாண்டில் இந்நிறுவனம் 5.12 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் மோட்டார்சைக்கிள் விற்பனை 2.07 லட்சமாகவும், ஸ்கூட்டர் விற்பனை 1.23 லட்சமாகவும் உயர்ந்துள்ளது. இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதி 22 சதவிகிதம் வளர்ச்சி கண்டு 61 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 52 சதவிகிதம் உயர்ந்து சுமார் 21 ஆயிரம் என்றளவிலும் உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ