Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அன்னிய நேரடி முதலீடு 17% வளர்ச்சி: இந்தியாவிற்கு 16வது இடம்

இந்தியாவில், 2013ல் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு 17 சதவிகிதம் வளர்ச்சி கண்டு 2,800 கோடி டாலராக உயர்ந்துள்ளது. 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின் உலகம் முழுவதுமாகவே அன்னிய நேரடி குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. ஐ.நா. சபையின் அண்மைக் கால ஆய்வறிக்கையில் ஒன்றில் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் சென்ற ஆண்டில் 1.46 லட்சம் கோடி டாலர் அளவிற்கு அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, 2012ம் ஆண்டை விட 11 சதவிகிதம் அதிகமாகும். இந்நிலையில் 2014ல் இந்த முதலீடு 1.60 லட்சம் கோடி டாலராகவும், 2015ல் 1.80 லட்சம் கோடி டாலராகவும் அதிகரிக்கும் என ஐ.நா. சபையின் வர்த்தக மற்றும் மேம்பாட்டு அறிக்கை குறிப்பிட்டுள்ளது. காரணம் 
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி வருவதே ஆகும். எனினும் நாடுகளின் வளர்ச்சியில் சீரான முன்னேற்றம் இருக்காது என்பதாலும், அமெரிக்காவின் கடன் பத்திர அளவில் குறைப்பு நடவடிக்கை குறித்த அச்சாப்பாடுகளாலும் நாடுகளுக்கிடையிலான அன்னிய நேரடி முதலீடு மிகப்பெரிய அளவில் மாற்றம் இருக்காது. 
 
கடந்த ஆண்டில், வளர்ந்து வரும் நாடுகளில் மட்டும் 759 பில்லியன் டாலர் முதலீடு பெற்றது. உலகில் மேற்கொள்ளப்பட்ட மொத்த அன்னிய முதலீட்டில் இது 52 சதவிகிதமாக உள்ளது. அதே சமயம் வளர்ச்சியடைந்த நாடுகள் பெற்ற அன்னிய முதலீடு மொத்த முதலீட்டில் 39 சதவிகித அளவிற்கே உள்ளது. இந்த வகையில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வளர்ச்சி அடைந்த நாடுகளின் பங்கு வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ளது. இந்த நாடுகளில் மொத்தம் 576 பில்லியன்ன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் 2012ஐ விட இது 12 சதவிகிதம் அதிகமாகும். இதில் குறிப்பிடத்தக்க  விஷயம் என்னவென்றால், 
ஐரோப்பிய நாடுகளில் இவ்வகை முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதுதான். அமெரிக்காவில் அன்னிய நேரடி முதலீடு 159 பில்லியன் டாலராகும்.
 
உலக அளவில் அதிக அளவு அன்னிய முதலீட்டை பெற்ற 20 நாடுகளில் இந்தியா 16 இடத்தைப் பிடித்துள்ளது. பிரேசில், ரஷ்ய கூட்டமைப்பு, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தொகுதியான பிரிக்ஸ் மண்டலம் தொடர்ந்து அதிக அன்னிய முதலீட்டை பெற்று வருகிறது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ