Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நேரடி மின்சாரம் வாயிலாக தடையில்லா மின் விநியோகம்!

வீடுகளுக்கு ‘டைரக்ட் கரண்ட்’ எனப்படும் நேரடி மின்சாரம் வாயிலாக தடையில்லாமல் மின் விநியோகம் செய்வதற்கான புதிய முறையை சென்னை ஐ.ஐ.டி கண்டுபிடித்துள்ளது. இதன் வாயிலாக மின்சார வாரியம் ஒவ்வொரு வீட்டிற்கும் மூன்று விளக்குகள், இரண்டு மின் விசிறிகள், ஒரு செல்போனை சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய அளவிலான மின்சாரத்தை மட்டுமே வழங்க முடியும்.
ந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு துணை மின் நிலையத்திலிருந்தும் வீடுகளுக்கு நேரடியாக மின்சாரம் வழங்கப்படும். இந்த மின்சாரத்திலிருந்து ஒரு தனி மீட்டருக்கு இணைப்பு வழங்கி அதன் வாயிலாக மின் சாதனங்களை இயக்க முடியும். வீட்டின் இதர பகுதிகள் வழக்கம்போல் மாற்று மின்சாரத்தில் இயங்கும். 
 
சென்னை ஐ.ஐ.டி.யின் திட்டத்தில் நேரடியாக வழங்கும் மின்சாரத்தின் அளவு 100 வாட்ஸ்களாக மட்டுமே உள்ளதால் இந்த மின்சாரத்தை மின்சார வாரியம் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படாது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் மட்டுமே மின்சாரத்தில் தடை ஏற்படும். இந்த திட்டத்தை முதல் கட்டமாக சில வீடுகளில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஐ.ஐ.டி. மாணவர்கள் இறங்க உள்ளனர். நல்லது நடந்தால் சரிதானே. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ