Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கார், மேட்டார் வாகன விற்பனை சரிவடையும்!

கடந்த 42 மாதங்களில் பெட்ரோல் விலை 51 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இரு சக்கர வாகனங்கள், கார் விற்பனை குறைந்து மோட்டார் வாகனங்கள் விற்பனை மேலும் சரிவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு ஆண்டுக்கு 1.60 கோடி டன் பெட்ரோல் விற்பனையாகிறது. இதில் 61.42 சதவிகிதம் பெட்ரோல் இரு சக்கர வாகனங்களில் பயன்படுத்தப்படுவதாக நீல்சன் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிகிறது. இது கிராமங்களின் பங்கு 30 சதவிகிதமாக உள்ளது. வேளாண் துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால் கிராமங்களில் தனிநபர் செலவிடும் தொகையும் அதிகரித்துள்ளது. மேலும் 
டிசம்பர் மாதத்தில் இரு சக்கர வாகனங்கள் விற்பனை 2.32 சதவிகிதம் அதிகரித்து 11,37,081லிருந்து 11,63,465 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், கார் விற்பனை 9.59 சதவிகிதம் சரிவடைந்தது.
 
இந்நிலையில், பெட்ரோல் விலை அதிகமாக உள்ளதால் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் விற்பனையில் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள நிலையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டுகளில் பாரத ரிசர்வ் வங்கி முக்கிய கடன்களுக்கான வட்டியை பல முறை உயர்த்தியதையடுத்து உள்நாட்டில் கடனிற்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. நாட்டில் விற்பனையாகும் கார்களில் 65 சதவிகிதம் கடன் வாயிலாகத்தான் விற்பனை செய்யப்படுகிறது.
 
கடந்த 2010ஜூன் மாதத்தில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரேலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமை வழங்கப்பட்டது. அன்றிலிருந்து இதுவரை பெட்ரோல் விலை 51 சதவிகிதம் உயர்ந்துள்ளது. நாட்டில் பயன்படுத்தப்படும் மொத்த பெட்ரோலில் 99.6 சதவிகிதம் மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆக இது போன்ற பல காரணங்களால் நடப்பாண்டில் வாகனங்கள் விற்பனை குறையலாம். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ