Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மானிய விலையில் இனி வருடத்திற்கு 12 சிலிண்டர்.


மானிய விலையில் வழங்கப்படும் காஸ் சிலிண்டர் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. மாதத்திற்கு ஒரு காஸ் சிலிண்டர் விதம் வருடத்திற்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் வாங்கிக் கொள்ளலாம். 

கடந்த 2012 செப்டம்பரில் மானிய விலையில் 6 சிலிண்டர் என மத்திய அரசு அறிவித்தது. பொதுமக்களிடம் எழுத்த எதிர்ப்பை அடுத்து ஐனவரி 2013ல் வருடத்திற்கு 9 சிலிண்டர் என உயர்த்தியது. இது வருகிற மார்ச் மாதத்துடன் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் சிலிண்டர் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. 

இதனால் மத்திய அரசுக்கு கூடுதலாக ஐந்தாயிரம் கோடி ரூபாய் செலவாகும் என பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்பமொய்லி தெரிவித்தார். மேலும் சிலிண்டர் இணைப்பை ஆதார் எண்ணுடன் சேர்ப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ