Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பான் கார்டு: புதிய வழிமுறை நிறுத்திவைப்பு

 மத்திய நேரடி வரி வாரியம் ஏற்கனவே பான் கார்டு விண்ணப்பிக்க புதிய வழிமுறைகளை அறிவித்திருந்தது. இது பிப்ரவரி 3ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறியிருந்தது. இந்நிலையில் இந்த புதிய வழிமுறைக்கு பொதுமக்கள் மற்றும் முகவர்களிடம் இருந்து  பல கருத்துக்கள் எதிராக வந்திருந்தன.

அசல் ஆவணங்களை சரியாக பாதுகாக்க முடியாது, கிராமப்புரங்களில் உள்ள மக்கள் அதிக தொலைவில் உள்ள நேரடி பான் கார்டு மையங்களை அணுகுவதில் சிரமம் என பல்வேறு காரணங்களால் தற்போதைக்கு பழைய வழிமுறையே பின்பற்றப்படும் என்று மத்திய நேரடி வரி வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ