Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் இறக்குமதி 500 டன்னிற்கு கீழ் குறையலாம்!

தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை என்றால், நடப்பு நிதி ஆண்டில் தங்கம் இறக்குமதி 500 டன்னிற்கும் கீழாக குறையும் என அனைத்திந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரண வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 2012- - 13ல் நடப்பு கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து இருந்தது. இதற்கு தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டதே முக்கிய காரணமாக இருந்தது. குறிப்பாக தங்கம் இறக்குமதி 845 டன்னாக மிகவும் உயர்ந்தது. இதனால் தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் அதன் மீதான இறக்குமதி வரி 10 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. மேலும் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவிகிதத்தை ஆபரணங்களாக மாற்றி ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற விதிமுறையையும் ரிசர்வ் வங்கி நிர்ணயித்தது. இந்த விதிமுறைகள் தளர்த்தப்படாவிட்டால் இந்த நிதி ஆண்டில் தங்கம் இறக்குமதி 500 டன்னிற்கும் கீழாக குறைந்துவிடும் என நிறுவனங்கள் மதிப்பீடு செய்துள்ளன.
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ