Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

7 நிறுவன பங்குகளின் மதிப்பு சரிவு!

கடந்த வார வர்த்தகத்தில் ஏழு ‘புளுசிப்’ நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.47,050 கோடி குறைந்துள்ளது.

 
அமெரிக்க ஃபெடரல் வங்கி கடன் வழங்கும் திட்டத்தின் அளவை மீண்டும் குறைத்தது. இதனால் இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவு மற்றும் பாரத ரிசர்வ் வங்கி முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது போன்ற காரணங்களால் சென்ற வாரம் பங்கு வியாபாரம் பெரும் சரிவை சந்தித்தது.
குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் மதிப்பு அதிகபட்சமாக ரூ.11,669 கோடி குறைந்து ரூ.2,68,502 கோடியாக சரிவடைந்துள்ளது. ஹெச்.டீ.எஃப்.சி வங்கி பங்குகளின் மதிப்பு ரூ.10,679 கோடி சரிந்து ரூ.1,50,704 கோடியாக குறைந்துள்ளது. ஓ.என்.ஜி.சி. பங்குகளின் மதிப்பு ரூ.6,631 கோடி குறைந்து ரூ.2,35,703 கோடியாக சரிவடைந்துள்ளது. மேலும் கோல் இந்தியா பங்குகளின் மதிப்பு ரூ.6,569 கோடி சரிந்து ரூ.1,56,330 கோடியாக குறைந்துள்ளது. ஹெச்.டீ.எஃப்.சி. நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.5,738 கோடி குறைந்து ரூ.1,25,999 கோடியாக சரிவடைந்துள்ளது. இன்ஃபோசிஸ் பங்குகளின் மதிப்பு ரூ.3,423 கோடி சரிந்து ரூ.2,12,435 கோடியாக குறைந்துள்ளது. டி.சி.எஸ். பங்குகளின் மதிப்பு ரூ.2,341 கோடி குறைந்து ரூ.4,38,010 கோடியாக சரிவடைந்துள்ளது.
 
அதே சமயம் மூன்று நிறுவன பங்குகளின் மதிப்பு அதிகரித்துள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகளின் மதிப்பு அதிகபட்சமாக ரூ.740 கோடி அதிகரித்து ரூ.1,25,978 கோடியாக உயர்ந்துள்ளது. ஐ.டி.சி. பங்குகளின் மதிப்பு ரூ.714 கோடி உயர்ந்து ரூ.2,58,135 கோடியாக அதிகரித்துள்ளது. விப்ரோ பங்குகளின் மதிப்பு ரூ.433 கோடி அதிகரித்து ரூ.1,41,763 கோடியாக உயர்ந்துள்ளது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ