Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல்.ஐ.சி முன்னிலை!

நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (ஏப்ரல்-டிசம்பர்) பிரிமிய வருவாய் வளர்ச்சியில் தனியார் துறையை காட்டிலும் பொதுத்துறையை சேர்ந்த எல்.ஐ.சி. நிறுவனம் முன்னிலையில் உள்ளது. எல்.ஐ.சி. நிறுவனத்தின் பிரிமிய வருவாய் முதல் ஒன்பது மாதங்களில் 32 சதவிகிதம் அதிகரித்து ரூ.65,775 கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.50,277.42 கோடியாக இருந்தது. 

அதே சமயம் தனியார் துறையை சேர்ந்த 23 காப்பீடு நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய் வளர்ச்சியில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. கணக்கீடு காலத்தில் தனியார் நிறுவனங்களின் பிரிமிய வருவாய் 0.23 சவிகிதம் மட்டுமே அதிகரித்து ரூ.18,907.07 கோடியிலிருந்து ரூ.18,951.27 கோடியாக உயர்ந்துள்ளது. தனியார் துறை நிறுவனங்களில் ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல், எச்.டீ.எஃப்.சி. ஸ்டாண்டு லைஃப், பிர்லா சன் லைஃப் போன்ற  நிறுவனங்களின் பிரிமிய வருவாய் வளர்ச்சியும்  குறைந்துள்ளது. 
 
அதே சமயம் ரிலையன்ஸ் லைஃப், மேக்ஸ் லைஃப் மற்றும் மேக்ஸ் லைஃப் உள்ளிட்ட நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி நன்றாக உள்ளது.
ரிலையன்ஸ் லைஃப் நிறுவனத்தின் பிரிமிய வருவாய் 56 சதவிகிதம் அதிகரித்து ரூ.1,424.13 கோடியாக உயர்ந்துள்ளது. மேக்ஸ் லைஃப் நிறுவனத்தின் புதிய பிரிமிய வருவாய் ரூ.1,283.96 கோடியிலிருந்து ரூ.1,479.24 கோடியாக அதிகரித்துள்ளது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ