Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் மற்றும் வெள்ளி மீதான அடிப்படை விலை குறைpப்பு!

சர்வதேச அளவில் விலை குறைந்துள்ளதால் இறக்குமதி வரியை நிர்ணயிப்பதற்கான தங்கம் மற்றும் வெள்ளி மீதான அடிப்படை விலையை மத்திய அரசு  குறைத்துள்ளது.

இறக்குமதி செய்யும் பொருள்களின் விலையை குறைத்து காட்டிசிலர்  வரி ஏய்ப்பு செய்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட முக்கிய பொருள்களின் இறக்குமதிக்கான அடிப்படை விலையை இரு வாரங்களுக்கு ஒரு முறை மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. தங்கம் இறக்குமதி மீதான அடிப்படை விலை 407 டாலரிலிருந்து (10 கிராம்) 404 டாலராக குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று வெள்ளி இறக்குமதி மீதான அடிப்படை விலை 663 டாலரிலிருந்து (ஒரு கிலோ) 635 டாலராக குறைக்கப்பட்டுள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ