Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

10,000 பேருக்கு 6.5 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர்?

2014-15-ஆம் நிதி ஆண்டில் மருத்துவ சேவைத்துறை நிறுவனங்களின் வருவாய் 10 முதல் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என இந்தியா ரேட்டிங்ஸ் மற்றும் ரிசர்ச் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக சிறப்பு மருத்துவமனைகளில் தற்போது படுக்கை வசதிகள் அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணமாகும். பலநோக்கு மருத்துவமனைகள் உள்ளடங்கிய பெரிய நிறுவனங்களின் வருவாய் நடப்பு ஆண்டைக் காட்டிலும் நன்றாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வாழக்கை முறை மாற்றம் மற்றும் உடல்நல குறைபாடுகள் போன்றவற்றின் காரணமாக மருத்துவ சிகிச்சைக்கான தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. அதேசமயம், இதனை ஈடுகட்டும் அளவிற்கு போதுமான அளவிற்கு மருத்துவமனைகள் இல்லை. அதிகரித்து வரும் ஆயுள் காப்பீடு, விழிப்புணர்வு மற்றும் தனிநபர் செலவிடும் வருமானம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் இத்துறையில் தொடர்ந்து வளர்ச்சி ஏற்படும்.
 
இந்தியாவில் 10,000 பேருக்கு 6.5 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். இது உலக நாடுகளின் சராசரி அளவான 14.2-ஐக் காட்டிலும் குறைவாகும். 2020-ஆம் ஆண்டிற்குள் 10,000 பேருக்கு 20 படுக்கை வசதிகள் என்ற அளவை எட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக 15 லட்சம் படுக்கைகள் கூடுதலாக உருவாக்கப்பட வேண்டும் என இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச் தெரிவித்துள்ளது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ