Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உருக்கு உற்பத்தி 30 கோடி டன்னாக அதிகரிக்க திட்டம்!

உருக்கு உற்பத்தி திறனை மூன்று மடங்கு அதிகரித்து 30 கோடி டன்னாக அதிகரிக்க திட்டம் உள்ளதாக மத்திய உருக்கு துறை அமைச்சர் பென்னி பிரசாத் வர்மா கூறியுள்ளார்.  
மத்திய அரசின் உயர்மட்ட குழு இந்தியாவின் உருக்கு உற்பத்தி திறனை மூன்று மடங்கு அதிகரிக்கும் வகையில் உருக்கு துறையின் ஆய்வு மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் செயல்திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது. அது தற்போது ஆண்டு உருக்கு உற்பத்தி திறன் 9.60 கோடி டன்னாக உள்ளது. கோன்டா, பராபங்கி, லக்கிம்பூர், ஜான்சி உள்ளிட்ட 10 இடங்களில் ரூ.100 கோடி முதலீட்டில் உருக்கு ஆலைகளை நிறுவப்பட உள்ளன. இதன் மூலம் ஒவ்வொரு ஆலையிலும் 200 பேர் வேலைவாய்ப்பு பெறுவர். மேலும் ஜெகதிஷ்பூரில் ஆண்டுக்கு 13 ஆயிரம் டன் உருக்கு உற்பத்தி திறன் கொண்ட ஆலையும், ஆண்டுக்கு 1,50,000 டன் உற்பத்தி திறன் கொண்ட டி.எம்.டி. பார் ஆலையும் நிறுவபட உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close