Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேங்க் ஆப் இந்தியா ரூ.586கோடி நிகரலாபம்!

பேங்க் ஆஃப் இந்தியா, டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.586 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.803 கோடியாக இருந்தது. ஆக, நிகர லாபம் 27 சதவிகிதம் குறைந்துள்ளது. இக்காலாண்டில் ஒதுக்கீடுகள் அதிகரித்ததே நிகர லாபம் சரிவிற்கு முக்கிய காரணம் என இவ்வங்கி கூறியுள்ளது. மேலும் மொத்த ஒதுக்கீடுகள் 48 சதவிகிதம் அதிகரித்து ரூ.1,052 கோடியிலிருந்து ரூ.1,558 கோடியாக உயர்ந்துள்ளது.
இதே காலாண்டில் இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் 17.81 சதவிகிதம் அதிகரித்து ரூ.2,719 கோடியாகவும், வட்டியில்லா இதர வருவாய் 17 சதவிகிதம் அதிகரித்து ரூ.1,097 கோடியாகவும் உயர்ந்துள்ளது. மொத்த வாராக் கடன் 3.08 சதவிகிதத்திலிருந்து 2.81 சதவிகிதமாகவும், நிகர வாராக் கடன் 1.97 சதவிகிதத்திலிருந்து 1.75 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. 
 
 
    
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ