Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீடு விற்பனை 22 % வளர்ச்சி!

நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ஆறு பெரிய நகரங்களில் வீடுகள் விற்பனை 22 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 

பொருளாதார வளர்ச்சி குறைந்தது மற்றும் நிலையற்ற அரசியல் சூழ்நிலை போன்றவற்றால் உள்நாட்டில் முந்தைய சில காலாண்டுகளில் வீடுகள் விற்பனை சரிவடைந்திருந்தது. ஆனால் மூன்றாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி குறிப்பிட்ட அளவு வளர்ச்சியடைந்ததையடுத்து வீடு விற்பனையும் சற்று அதிகரித்துள்ளது. 

குறிப்பாக பெங்களூர், சென்னை, ஜதராபாத், மும்பை, புதுடெல்லி மற்றும் பூனா உள்ளிட்ட நகரங்களில் வீடுகள் விற்பனை மூன்றாவது காலாண்டில் வீடுகள் விற்பனை நன்கு உயர்ந்துள்ளது. இது முந்தைய காலாண்டில் வீடுகள் விற்பனை சராசரியாக 1 சதவிகிதம் மட்டுமே அதிகரித்திருந்தது. மேலும் விற்பனை ஆகாத பரப்பளவு 71.12 கோடி சதுர அடியிலிருந்து 70.88 கோடி சதுர அடியாக குறைந்துள்ளது.

இதே காலத்தில் நிறுவனங்களால் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் குடியிருப்புகள் 14 சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும் பெங்களூரில் அதிகபட்சமாக வீடுகள் விற்பனை 58 சதவிகிதம் அதிகரித்துள்ளது. முந்தைய காலாண்டில் அங்கு வீடுகள் விற்பனை மந்தமாகவே இருந்தது. சென்னையில் குறைந்தபட்சமாக வீடுகள் விற்பனை 3 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் சென்னையில் விற்பனை 1 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது என்று சொத்து ஆராய்ச்சி நிறுவனமான லியாசேஸ் கூறியுள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ