Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காதலர் தினம்: இந்திய ரோஜாக்கள் அதிக அளவில் ஏற்றுமதி

ரோஜாப்பூ உற்பத்தி இந்த வருடம் சீனாவிலும், ஆப்பிரிக்காவிலும் குறைந்து காணப்பட்டதால் இந்திய ரோஜாப்பூக்களின் மதிப்பு உலக சந்தையில் அதிகரித்துள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் இந்திய மலர்களுக்கு குறிப்பாக பெங்களூர், ஓசூர் மலர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது, மேலும் சென்ற ஆண்டு 4 முதல் 4.5 மில்லியன் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன இந்த ஆண்டு அதைவிட 25% ஏற்றுமதி அதிகரித்து 6 மில்லியனை தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக தென்னிந்திய மலரியல் சங்கம் அறிவித்துள்ளது.

எப்போதும் லண்டன், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அதிகம் ஏற்றுமதியாகும் இந்திய மலர்களுக்கு இந்த ஆண்டு இரஷ்யாவிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.சென்ற ஆண்டு 5.5 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒற்றை மலர் இந்த ஆண்டு 8 ரூபாய்க்கு விற்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த காதலர் தினத்தை அதிகம் ஆக்கிரமிக்க போவது இந்திய ரோஜக்கள் தான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close