Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாரன் பஃபெட் வாழ்க்கையில்...

உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பஃபெட்"  பற்றிச் சில சுவாரஸ்யமான தகவல்கள்

1. அவர் முதல் பங்கு  வாங்கியது அவரின் 11 வயதில்... அதுவே, தான் தாமதமாக வாங்கியதாகப் பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்...

2. 14 வயதிலேயே தனது சுயசம்பாத்தியத்தில் சின்னப் பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்... அந்தப் பணம் அவர் பேப்பர் டெலிவரிச் செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம்

3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அந்த வீட்டுக்கு சுற்றுச் சுவரோ அல்லது வேலியோ இல்லை

4. அவராகவே அவர் காரை எங்கும் ஓட்டிச் செல்வார்... டிரைவர் மற்றும் பாதுகாப்புக்கென ஆட்கள் யாரும் கிடையாது

5. அவர் இதுவரை எங்கும் தனி விமானத்தில் பயணித்தது கிடையாது... உலகின் பெயர்பெற்ற, பெரிய‌ விமானக் கம்பெனிக்குச் சொந்தக்காரர் அவர்....

6. அவரின் சொந்த கம்பெனிகள் மொத்தம் 63. வருடம் ஒருமுறை மட்டுமே கம்பெனியின் தலைமைப் பொறுப்பாளருக்கு கடிதம் எழுதுவார்... இடைப்பட்ட எந்தவொரு மீட்டிங் மற்றும் சந்திப்புகளும் இருக்காது... அந்தக் கடிதத்தில் கம்பெனியின் அடுத்த இலக்கைக் குறிப்பிட்டிருப்பார்...

7. கம்பெனிப் பொறுப்பாளருக்கு இரண்டு விதிகளை மட்டும் குறிப்பிடுவார் ... அது

(அ) பங்குதாரர்களின் பணத்தை நஷ்டமடையச் செய்யக்கூடாது

(ஆ) முதலாவது விதியை மறக்க கூடாது

8.அவரைச் சுற்றி எப்போதும் ஓர் உயர்தரச் சமூகத்தினரின் கூட்டம் இருக்காது... அவரின் ஓய்வு நேரத்தில் அவருக்குத் தேவையான பாப் கார்னை வீட்டில் அவரே தயார் செய்து சாப்பிடுவார், டிவி பார்ப்பார்...

9. அவரிடம் எந்தவொரு செல்போனோ அல்லது மடிக் கணினியோ வைத்திருக்க மாட்டார்...

10. உலகின் முதல் பணக்காரரான பில் கேட்ஸ் சில வருடங்களுக்கு முன் இவரைச் சந்திக்க‌, இருவருக்கும் பொதுவான எதுவும் இல்லையென்று எண்ணி முதலில் வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே வாரன் பஃபெட்டைச் சந்திக்க
நேரம் ஒதுக்கியிருந்தார்... ஆனால், சந்தித்தபோது, அந்தச் சந்திப்பு பத்து மணி நேரங்களுக்கும் மேலாக நடைபெற்றது

எளிமையின் மனிதரான வாரன் பஃபெட் நமக்குச் சில அறிவுரைகளைச் சொல்கின்றார்... அவை :

1. பணம் மனிதனைப் படைக்கவில்லை, ஆனால் பணத்தைப் படைப்பவனை மதிக்கின்றது

2. உங்கள் வாழ்க்கையினை எளிமையாகவும், எளிதாகவும் வாழுங்கள்

3. அடுத்தவர்கள் சொல்வதைச் செய்யாதீர்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள், ஆனால் உங்களுக்குச் சரியெனப்படுவதை நீங்கள் செய்யுங்கள்

4. புகழ்பெற்ற கம்பெனியினை பின்பற்றாதீர். உங்களுக்கு வசதியானதை வாங்கிப் பயன்படுத்துங்கள்...

5. பணத்தைத் தேவையற்ற பொருட்களை வாங்கி வீணாக்காதீர்

6. உனது வாழ்க்கை... நீயே விதிகளைத் தீர்மானி, அடுத்தவரை உன் வாழ்க்கையினைத் தீர்மானிக்க அனுமதிக்காதே...

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ