Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மக்காச்சோளம் ஏற்றுமதி 31 சரிவடையலாம்!

நடப்பு பருவத்தில் (2013 நவம்பர்- - 2014 அக்டோபர்) மக்காச்சோளம் ஏற்றுமதி 31 சதவிகிதம் சரிவடைந்து 3.2 மில்லியன் டன்னாக குறையும் என அமெரிக்க வேளாண் துறை மதிப்பீடு செய்துள்ளது.
2012&-13ல் 4.67 மில்லியன் டன்னாக  மக்காச்சோளம் ஏற்றுமதி செய்யப்பட்டதாக முதல் கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
 
நாட்டில் மிக முக்கியமாக கோழித்தீவனமாக மக்காச்சோளம் பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் தேவைப்பாடு குறைந்ததால் மக்காச்சோளம் ஏற்றுமதி சரிவடையும் என அமெரிக்க வேளாண் துறை தெரிவித்துள்ளது. எனினும் இதனால் உள்நாட்டில் விலை நிலவரங்கள் பாதிக்கப்படாமல் நிலையாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒரு டன் மக்காச்சோளம் விலை ரூ.11,640 முதல் ரூ.13,650 வரை உள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒரு டன்னுக்கு ரூ.13,100 ஆக மத்திய அரசு நிர்ணயம் செய்திருப்பதும் விலை நிலையாக இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.
 
மேலும் சந்தை நிலவரப்படி, மத்திய அரசு சுமார் 4.50 லட்சம் டன் மக்காச்சோளம் கொள்முதல் செய்துள்ளதாக அமெரிக்க வேளாண் துறை தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையில் ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து இந்த மக்காச்சோளம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் 2009&10 பருவத்தில் அதிகபட்சமாக 3.29 லட்சம் டன் மக்காச்சோளத்தை மத்திய அரசு கொள்முதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ