Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆந்திரா வங்கி நிகர லாபம் ரூ.257 கோடி!

பொதுத் துறை வங்கியான ஆந்திரா வங்கி டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.257 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இதில் மொத்த வருவாய் 12.5 சதவிகிதம் அதிகரித்து ரூ.3,469 கோடியிலிருந்து ரூ.3,901 கோடியாக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் முதல் மூன்று காலாண்டுகளில் இவ்வங்கியின் நிகர லாபம் 63.1 சதவிகிதம் குறைந்து ரூ.945 கோடியிலிருந்து ரூ.348 கோடியாக சரிவடைந்திருந்தது. மொத்த வருவாய் 13 சதவிகிதம் அதிகரித்து ரூ.10,241 கோடியிலிருந்து ரூ.11,572 கோடியாகவும் உயர்ந்துள்ளது. மேலும் 2015ல் ரூ. 800 கோடி ரூபாய் லாபம், ஈட்டாவும் திட்டமிட்டுள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ