Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் மற்றும் அடிப்படை உலோகங்களின் விலையில் மாற்றம் இருக்கலாம்!

அமெரிக்காவில் ஜனவரி மாதத்தில் வேலையின்மை 6.6 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. இது டிசம்பர்
 
மாதத்தில் 6.7 சதவிதமாக இருந்ததது என்று அமெரிக்க தொழிலாளர் துறை தெரிவித்திருக்கிறது. அக்டோபர்
 
2008 பிறகு இப்பொழுதுதான் வேலையின்மை இந்த சதவிகிதத்தை தொடுகிறது. 
 
 
மேலும் ஜனவரி மாதத்தில் அமெரிக்க பொருளாதாரத்தில் 1,85,000 வேலைகள் உயரும்
 
என்ற சந்தையின் எதிர்பார்ப்புகளுக்கு  எதிராக குறைந்து 1,13,000 அதிகரித்திருக்கிறது. 
 
எதிர்ப்பாத்தை விட குறைந்த அளவில் தான் வேளைகளின் எண்ணிக்கை
 
அதிகரித்திருந்தால் அமெரிக்க டாலரின் விலை மற்ற நாணயங்களுக்கு எதிராக
 
குறைந்தது. அதனால்  தங்கம் மற்றும் மற்ற உலோங்களின் மதிப்பு உயர்ந்திருந்தது.
 
நிபுணர்கள் ஜனவரி மாதா வேலையின்மை சதவிதத்தில் மாற்றம் இருக்காது என்ற
 
எதிர்பார்த்த  நிலையில் இது சற்று குறைந்திருப்பதால் பெடரல் வங்கியின் புதிய தலைவரான ஜனெட் ஹெலன்
 
தொடர்ந்து பாண்ட் வாங்குவதை குறைக்கலாம் என்று வர்த்தகர்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.
 
இதையடுத்து தங்கம் மற்றும் அடிப்படை உலோகங்களின் விலையில் மாற்றம் இருக்கலாம் என்றும்
 
எதிர்பார்க்கப்படுகிறது என்கிறார் ஐஃபின் நிறுவனத்தின் சீனியர் டீலர் சீனிவாசன்.  
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ