Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செபி கண்காணிப்பில் தங்க நகை திட்டம்-!

ஆபரண தங்க நகைகளை வாங்குவதும், அதை ஒரு பாதுகாப்பான முதலீடு என்றும் நடுத்தர வர்க்கத்தினர் கருதி வருகின்றனர். இந்த வகை முதலீட்டாளர்களை குறிவைத்து, ‘கோல்டு பாண்டு’, ‘தங்க நகை திட்டம்’ என்று கவர்ச்சிகரமான பெயர்களில் முதலீடுகள் பெறப்படுகிறது. இதில் சேரும் முதலீட்டாளர்கள் பலரும் ஏமாற்றப்படுகிறார்கள். 

இப்படி முதலீடு பெறும் நிறுவனங்களோ அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்களோ இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்வதில்லை. இதனால், இவற்றின் செயல்பாட்டை ஆர்பிஐ அல்லது மத்திய, மாநில அரசுகளோ கண்காணிக்க முடிவதில்லை என்றும் செபி வட்டாரங்கள் கூறுகின்றன. இது போன்ற நடவடிக்கையை செபி கண்காணிக்கும், இதற்காக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் ஆர்பிஐ உதவியை செபி எதிர்நோக்கியுள்ளது என்றும் செபி வட்டாரங்கள் கூறுகின்றன.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ