Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 85 புள்ளிகள் உயர்வு


இன்று (பிப்.12, 2014) சென்செக்ஸ் 85 புள்ளிகள் உயர்வைக் கண்டுள்ளது. சென்செக்ஸ் 85.12 புள்ளிகள் உயர்ந்து 20,488.49 புள்ளிகளிலும், நிஃப்டி 21.30 புள்ளிகள் உயர்ந்து 6,084 புள்ளிகளிலும் முடிந்துள்ளது. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் பெரிய மாற்றங்களை சந்திக்கவில்லை.
 
ஐசிஐசிஐ வங்கி பங்கு 3 சதவிகிதமும், பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஹெச்டிஎஃப்சி பங்கு தலா
1 சதவிகிதமும் விலை உயர்ந்துள்ளது.

ஆயில் மற்றும் கேப்பிட்டல் கூட்ஸ் பங்குகள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. கெயில் மற்றும் ஓஎன்ஜிசி பங்குகள் 2.5 சதவிகிதமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1.5 சதவிகிதமும் எல் அண்ட் டி மற்றும் பிஹெச்இஎல் பங்குகள் 1.5 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.
 
ஐடிசி, டாக்டர் ரெட்டீஸ், மாருதி, என்டிபிசி, ஹிண்டால்கோ பங்கு விலை 1 முதல் 1.6 சதவிகிதம் வரை
சரிந்துள்ளது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ