Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐந்து நகரங்களில் நுழைகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்

இந்தியாவில் முதல் முறையாக பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுகளை 1 பில்லியன் அளவிற்கு கொச்சி,மைசூர்,ஜெய்ப்பூர்,சிம்லா, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப் போவதாக மாநிலங்களுக்கான  நிதி அமைச்சர் நமோ நாராயண் மீனா தெரிவித்துள்ளார்.இது 2014ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
இந்தியாவின் இந்த ஐந்து நகரங்களும் வேவ்வேறு விதமான தட்பவெப்பநிலையை கொண்ட நகரங்கள் என்பதால் ரூபாய் நோட்டுகளும் தன்மையை அறிய இந்த சோதனை ஏதுவாக இருக்கும்.மேலும் பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகபடுத்துவதன் மூலம் நோட்டுகளில் எழுதும் பழக்கமும் குறைக்கப்படும்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ