Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய ரயில் சேவைகள் அறிமுகம்!

இன்று மத்திய அரசின் இடைக்கால ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன் கார்கே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததுடன், பல புதிய ரயில் சேவைகளையும் அறிமுகப்படுத்தினார். 
இந்த இடைக்கால பட்ஜெட்டில் ரயில் கட்டணங்களில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. மேலும் சரக்கு ரயில்களுக்காக தனி ரயில் பாதை அமைக்கப்பட்டதால் சரக்கு ரயில்கள் மூலம் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் கார்கே தெரிவித்தார். 
 
வரும் நிதிஆண்டில் 1.6 லட்சம் கோடி வருமான இலக்கு வைத்துள்ளதாகவும், இந்த ஆண்டு 1,31,500 கோடி சரக்கு மற்றும் பயணிகள் ரயில் சேவை மூலம் வருமானம் ஈட்டியுள்ளதாகவும் தெரிவித்தவர்,  ரயில்வே ஐடி துறையில் மேம்படுததப்பட்டுள்ள சேவைகளையும் குறிப்பிட்டார். 
 
புதிய சேவைகள்
பல புதிய ரயில் திட்டங்களும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ள சேவைகள் :  மும்பை - சென்னை, நாகர்கோவில் - காச்சிகுடா வாரந்திர ரயில் சேவை. நாகர்கோவிலில் இருந்து கரூர் நாமக்கல் சேலம் வழியாக காச்சிகுடா புதிய எக்ஸ்பிரஸ் ரயில். மன்னார்குடி  - மயிலாடுதுறை தினசரி பயணிகள் ரயில்.  மன்னார்குடி - ஜோத்பூர் வாரந்திர ரயில். திருவனந்தபுரத்தில் இருந்து ஈரோடு திருப்பத்தூர் வழியாக பெங்களூருக்கு புதிய ரயில், பெங்களூரு - சென்னை இடையே தினசரி ரயில், இது தவிர அருணாச்சல பிரதேசம், மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களுக்கான பல ரயில் சேவைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ