Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொருளாதாரத்தில் பணவீக்கதின் முக்கியத்துவம்!!!

 உடலில் வலிமை ஏற்படலாம் ஆனால் வீக்கமோ அல்லது வலிமை குறைவோ ஏற்படக்கூடாது. அதைப்போல ஒவ்வொரு நாட்டிலும்  பொருளாதாரத்தில் வளர்ச்சி இருக்கலாம் ஆனால் பண வீக்கமோ(Inflation) அல்லது பணவாட்டமோ(Deflation) ஏற்படக்கூடாது  என்கி்றார் ஐஃபின் நிறுவனத்தின்  சீனியர்  டீலர் ஸ்ரீனிவாசன். மேலும்  அதை பற்றி விரிவாகச் சொல்கிறார்.    

பணவீக்கம் எதனால் ஏற்படுகிறது?
 1. அதிகமான பண புழக்கம் (Increase in the money supply).
 2. அதிகமான பண தேவைப்பாடு (Increase in the demand for money).
 3. பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்கலில் குறைவு (Decrease in the aggregate supply of goods and services).
 4. சரக்குகள் மற்றும் சேவைகளின்  தேவைகள் அதிகரிப்பு (Increase in the aggregate demand for goods and services). இவைகளால்  பணவீக்கம் அதிகமாகிறது. 
 
 பண வீக்கம்  இரு பிரிவுகளாக இருக்கிறது:
 
 
 
 
செலவு மிகுதி பணவீக்கம்( Cost-Push Inflation):-
இது நான்கு உற்பத்தி காரணிகளால் (the four factors of production-labor, capital, land or entrepreneurship) (அதாவது  உழைப்பு, மூலதனம், நிலம் அல்லது தொழில் முனைவோர்) ஏற்படும்  செலவு மிகுதியால் உருவாகும் பணவீக்கமாகும். உதாரணத்திற்கு உள் நாட்டு நாணயத்தின் மதிப்பு குறைவால்  இறக்குமதி செய்யும் மூல பொருட்களின் விலை அதிகரிப்பால் லாபத்தை தக்கவைப்பதற்க்காக  இறுதி பொருட்களில் (Finished goods)விலையை உயர்த்துவதால் நுகர்வோர் அதிக விலை கொடுத்து  பொருட்கள் வாங்க நேரிடும்.  
 
 பணவீக்கம் தேவை மிகுதி (Demand-Pull Inflation):- 
பெரும் பொருளாதார (macro economy) பிரிவுகளான குடும்பங்களினால் , வர்த்தக ஸ்தலங்களினால், அரசாங்களினால்  மற்றும் வெளிநாட்டு வாங்குவோர்களிலால் பொருளாதாரத்தில் உற்பத்தியாவதை காட்டிலும் ஒரே நேரத்தில் போட்டி போட்டுகொண்டு வாங்குவதினால் இந்த பணவீக்கம் ஏற்படுகிறது. அதாவது ஒட்டுமொத்தமாக  ஒரே சமயத்தில் பெரும்பாலனவர்களுக்கு  தேவை ஏற்படும்பொழுது இது ஏற்படுகிறது.    
உதரணத்திற்கு உள்நாட்டு நாணய மதிப்பு குறைந்து போனால் இறக்குமதி பொருட்களின் விலை அதிமாகி நாட்டில் இறக்குமதி பொருள்கள் கிடைப்பதில் தட்டுபாடு ஏற்படும்பொழுது இந்த பணவீக்கத்திற்கு வழி வகை செய்யும்.   
 
பணவாட்டம் (Deflation):
பணவாட்டம் பணவீக்கத்திற்கு எதிரானது.  சரக்குகளின் விலைகளில் வீழ்ச்சி ஏற்படும்பொழுது இந்த பணவீக்கம் ஏற்படும். அதாவது பணவீக்கம் பூச்சியம் அல்லது  பூச்சியத்திற்கு குறைவாகயிருக்கும் பொழுது பணசுருக்கம் ஏற்படுகிறது.

பணவாட்டம் கீழே கொடுத்திருக்கும் காரணங்களினால் ஏற்படுகிறது :
1. பண வழங்கலோ அல்லது கடன் வழங்கலோ குறையும் பொழுதும்  (Decrease in  supply of money or credit).
2. அரசாங்க,தனிநபர் மற்றும் முதலீட்டு செலவுகள் ஏற்படும்பொழுதும்  பணவாட்டம் ஏற்படுகிறது.  பணவாட்டதால் பெரிய அளவில் பொருகள் வாங்காத சூழல் இருக்கும் பொழுது வேலையின்மை அதிகளவில் உருவாக வாய்ப்பிருக்கிறது.
 
தேக்கநிலை (Stagflation) 
பொருளாதார வளர்ச்சி மிகவும்  மந்தமாக இருக்கும் பொழுதும்  பொருட்களின் விலை உயர்வாக இருக்கும் சூழ்நிலை தேக்க நிலையாகும். இந்த சூழலில் வேலையின்மையும்  உயர்வாக இருக்கும்.   
          
கட்டற்ற பணவீக்கம் (Hyperinflation) : உள்நாட்டு உற்பத்தி திறனில் வளர்ச்சி இல்லாத பொழுது பணபுழக்கம மிகுதியால் விலைவாசி ஏறுமுகமாக இருக்கும் நிலை கட்டற்ற பணவீக்கம். இந்நிலையில் உள்நாட்டு நாணய மதிப்பு மிகவும்  சரிந்திருக்கும்.
 
நாட்டின் பொது பணவீக்கம்(Headline inflation/wholesale price index inflation/Top-line inflation): ஒரு  பொருளாதாரத்தில் உள்ள மொத்த பணவீ க்கத்தையும் கணக்கில்  எடுத்து கொள்ளும் பணவீக்கம் தான்.  உணவு மற்றும் எண்ணெய் பொருள்களின் விலைவாசி உயர்வு பொது பணவீக்கதில் அதிக விளைவை  ஏற்படுத்திகிறது. இது சேவை துறை விலைவாசியை கணக்கில் எடுத்து கொள்ளாது.  மேலும் இது பருவ நிலைபடி சரி செய்யபடாமல் இருப்பதால் இதை வைத்து நடப்பு பொருளாதாரத்தை அறிவது கடினமாக இருக்கும். இந்திய போன்ற நாடுகளுக்கு உணவு மற்றும் எண்ணெய் பொருள்களின் விலைவாசி பெரும் பிரச்சினையாக இருப்பதால்  பொது பணவீ க்கத்தை தான் பணவீக்கத்தின் அளவுகோலாக எடுத்துகொள்கின்றன. 
 
அடிப்படை பணவீக்கம் (core inflation):-
 இது பொது பணவீக்கதிலிருந்து வேறுபடுகிறது. இதில்  உணவு மற்றும் எண்ணெய் பொருள்களின் விலைவாசி உயர்வு கணக்கில் வராது.  மேற்கத்திய பொருளாதாரங்கள் உணவு மற்றும்   எண்ணெய் பொருள்களின் விலைவாசியால் பிரச்சினைகள் அவ்வளவாக இல்லாததால் அடிப்படை பணவீக்கத்தை எடுத்துகொள்கின்றன. மேலும் மத்திய வங்கிகள் இந்த பணவீக்கம் அதிக ஏற்ற இறக்க இல்லாதாலும் உற்பத்தியில் வழங்கல்கள்  மற்றும் தேவைகளை பிரதிபலிப்புகளால் இதை அளவுகோளாக எடுத்துகொல்கின்றன.  
                        
 அரசாங்கள் நிதிக்கொள்கைகளாலும்(Fiscal Policies) மத்திய வங்கிகள் பணவியல் கொள்ககளாலும்(Monetary policies) பொருளாதாரத்திளிருக்கும் வளர்ச்சியை உயர்த்தி பணவீக்கத்தை கட்டுப்பாட்டில் வைக்கின்றன.  மேலும் அரசாங்கமோ அல்லது மத்திய வங்கிகளோ தமது கொள்கைகள் சம்பந்தமாக அறிவிப்புகள் வெளியிடும் பொழுது பங்கு,  கமாடிட்டி மற்றும் கரன்சி சந்தைகள் அறிப்புகளுக்கு தகுந்தவாறு ஏற்ற இறக்கதுடன் காணப்படும். 
 
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ