Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2016ல் மருந்து விற்பனை 2,700 கோடி டாலரை எட்டும்!

இந்தியாவில், 2016ல் மருந்து விற்பனை 2,700 கோடி டாலரை எட்டும் என டெலாயிட் நிறுவனத்தின் அண்மைக் கால ஆய்வறிக்கை கூறியுள்ளது. 2012ல் 2,260 கோடி டாலருக்கு மருந்து விற்பனையாகி உள்ளதாக தெரிவித்துள்ள இந்த ஆய்வறிக்கை 2013ல் விற்பனை 2,360 கோடி டாலரை எட்டியிருக்கும் எனவும் மதிப்பீடு செய்துள்ளது.
உடல் நலத்திற்காக செலவிடப்படும் பணத்தில் மருந்துகளின் பங்கு அதிகமாக உள்ளது. இந்த வகையில் 2012ல் மருந்துகளின் பங்கு 22.6 சதவீவிகிதமாக இருந்தது. இது நடப்பு ஆண்டில் 23.6 சதவிகிதமாக உயர்ந்திருக்கும் என்றும், 2016ல் 27 சதவிகிதமாக உயரும் என்றும் டெலாயிட் ஆய்வறிக்கை முன்னறிவிப்பு செய்துள்ளது.
 
சர்வதேச அளவில் இந்தியா வளர்ந்து வரும் ஐந்து முன்னணி மருந்து சந்தைகளில் ஒன்றாக உள்ளது. பல்வேறு சமூக பொருளாதார காரணங்களை முன்னிட்டு இந்திய மருந்து சந்தை இரட்டை இலக்க வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக ஜெனரிக் மருந்துகள் விற்பனை அமோகமாக உள்ளது. நாள்பட்ட வியாதிகளுக்கான சிகிச்சை முறைகள் வளர்ந்து வருவதாலும், கிராமப்புறங்களில் மருந்து நிறுவனங்கள் தீவிர கவனம் செலுத்தி வருவதாலும் உள்நாட்டு மருந்து சந்தை விரிவடைந்து கொண்டே வருகிறது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ