Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

7 மாதங்களில் 364 புத்தகங்கள் படித்த சிறுமி!

அதிக நேரம் புத்தகத்தை வைத்து படிப்பதை விட இந்த கால குழந்தைகள் டி.வி மற்றும் விளையாட்டு, கேம்ஸ் போன்ற செயல்களில் ஈடுபாடு உள்ள குழந்தைகள் தான் அதிகம். ஆனால் இங்கிலாந்தின் செஷிர் பகுதியில் உள்ள ஆஷ்லே என்ற இடத்தை சேர்ந்த 9 வயது சிறுமி பெய்த் ஜாக்சன்.  இவள் தனது மிக குறைந்த வயதில் 364 புத்தகங்களை படித்து சாதனை படைத்து இருக்கிறாள். இவற்றை 7 மாதங்களில் படித்து முடித்து இருக்கிறாள் என்பது மிக ஆச்சரியபடதக்க விஷயம். இவள் தற்போது 4-வது வகுப்பு படித்து வருகிறாள்.
 
 
மேலும் விலங்குகள் பற்றிய புத்தகங்கள், மந்திர தந்திர புத்தகங்கள், சாகச கதை  புத்தகங்கள் தனக்கு பிடிக்கும் என கூறி உள்ளார். புத்தகங்கள் படிப்பது தவிர சிறுமி பெய்த் வாரந்தோறும் 4 மணி நேரம் ஜிம்னாஸ்டிக் பயிற்சி, கராத்தே மற்றும் வலை பந்து பயிற்சியும் மேற்கொள்கிறாள். டிரம்ஸ் வாசிக்கவும் பயிற்சி பெற்று வருகிறாள்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP