Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2014-15 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்!

2014-15 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் இன்று தாக்கல் செய்தார். இதில் அரிசிக்கு விதிக்கப்பட்ட சேவை வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மொபைல், சிறிய ரக கார்கள், பைக்குகளுக்கான உற்பத்தி வரி குறைக்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இடைக்கால பட்ஜெட்டின் சில சிறப்பு அம்சங்கள்!
 
வருமான வரி விதிப்பில் மாற்றமில்லை. இப்போதுள்ள நிலையே தொடரும். அதேசமயம் அரிசிக்கு விதிக்கப்பட்ட சேவை வரி ரத்து செய்யப்படுகிறது. நெல்லுக்கான சேவை வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. மேலும் மந்தமாக உள்ள வாகனத்துறைக்கு உற்பத்தி வரி குறைக்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு புதிய வரிவதிப்புகள் ஏதும் இல்லை. சிறிய ரக கார்கள், பைக் உற்பத்தி வரி 12 சதவிகிதத்தில் இருந்து 8 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. நடுத்தர ரக கார்களுக்கான உற்பத்தி வரி 24 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக குறைந்துள்ளது. விளையாட்டுத்துறை வாகனங்கள் மீதான வரி 30 சதவிகிதத்தில் இருந்து 24 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மொபைல் போன் சாதனங்களுக்கான உற்பத்தி வரி 12 சதவிகித்தில் இருந்து 10 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவ சேவைகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ப்ரிட்ஜ், ஏ.சி. இயந்திரங்களுக்கான வரி குறைப்பும் செய்யப்பட்டுள்ளது.
 
நடப்பு நிதியாண்டில் மொத்த திட்ட செலவினம் 5,55,322 கோடியாக இருக்கும். அதேசமயம் வேளாண்துறைக்கு அடுத்த நிதியாண்டில் வங்கிகள் ரூ.8 லட்சம் கோடி கடன் அளிக்கும். 
 
கல்விக்கடனுக்கு வட்டிச் சலுகை 
2009 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னதாக பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட கல்விக் கடனுக்கு வட்டிச் சலுகை வழங்கப்படும். இதன் மூலம் 9 லட்சம் மாணவர்கள் பயனடைவர். 
 
ஆதார் எண் மூலம் மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. குறைபாடுகள் சரி செய்யப்பட்ட பின்னர் ஆதார் அட்டை திட்டத்தை முற்றிலும் செயல்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ