Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹெச்.ஆர். செமினார்: இணையும் கிழக்கும் மேற்கும்...!

மனித வள மேம்பாட்டு நிறுவனமான ரைப் குளோபல், ரைப்னாமிக்ஸ் (RIPENOMICS) என்கிற பெயரில்  சர்வதேச மனித வள மேம்பாட்டு பயிற்சி முகாமை சென்னையில் நடத்துகிறது. இந்த நிகழ்வுக்கு மீடியா பார்ட்டனராக நாணயம் விகடன் இதழ் திகழ்கிறது. பிப்.28-ல் தொடங்கி மார்ச் 4 வரை இந்தக் கருத்தரங்கு நடக்கிறது. 

ரைப் குளோபல் -ன் இணை இயக்குநர் டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம், இந்தக் கருத்தரங்கின் முக்கிய நிகழவுகளை விவரித்தார்.



''ரைப்னாமிக்ஸ்-ல் தனி மனிதர்களின் வலிமையான உத்திகள், சிறப்பான செயல்பாடு, மகிழ்ச்சி போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒருவருக்கு மகிழ்ச்சி, செல்வம், வெற்றி கிடைக்கும் வழிகளை இந்தக் கருத்தரங்கம் எடுத்துச் சொல்கிறது. பொதுவாக, கருத்தரங்கம் நடக்கிறது என்றால் ஏதாவது ஒரு பிரிவினருக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால், இந்த ஐந்து நாள் கருத்தரங்கம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். பிப்ரவரி 28, மாலையில் இந்தக் கருத்தரங்கை தமிழக கவர்னர் ரோசையா தொடங்கி வைக்கிறார். அன்று பத்திரிகையாளர்களுக்கு "தி பாசிடிவ் கனெக்‌ஷன்" கருத்தரங்கம் நடக்கிறது. இதில், நாட்டின் வளர்ச்சிக்கு பத்திரிகையாளர்கள், பாசிடிவ் விஷயங்களை எடுத்துச் சொல்ல வேண்டியதின் அவசியம் விளக்கப்படுகிறது.



2வது நாள் ஆஸ்ட்ரா விருது விழா நடக்கிறது. இதில், சர்வதேச அளவில் மனித வள மேம்பாட்டு வளர்ச்சிக்கு சிறப்பாக பங்களித்தவர்களுக்கு விருது வழங்கி பாராட்டுகிறோம். அவர்களின் வெற்றியை நாட்டின் வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பயிற்சி அளிக்கிறோம்.

3வது நாள் நிகழ்ச்சியாக தி கியூமன் ஹார்ட் ஆஃப் பிசினஸ் என்கிற தலைப்பில் நடக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் இயந்திரங்களின் பங்களிப்பு அதிகரித்து விட்டது. சக பணியாளர்கள் இடையே பேசிக் கொள்வது கூட இல்லை. ஒரு நிறுவனத்தின் வருங்காலத்தை நிர்ணயிப்பது மனித வளம்தான். ஒரு பணியாளர், நிறுவனம் மற்றும் சக பணியாளர்களை புரிந்துக் கொண்டால் நல்ல பணிச் சூழல் உருவாகும். இந்தச் சூழ்நிலையை எப்படி உருவாக்குவது என்பதை புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் சொல்லப்பட்ட கருத்துகள் மூலம் விளக்கி சொல்கிறோம்.

நான்காம் நாள் நிகழ்வு பெயர், 'தி கனெக்‌ஷன்'. இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் மேனேஜர், சி.இ.ஓ, எம்.டி போன்றவர்களுக்கான தலைமைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மன அழுத்தம் இல்லாமல் நிறுவனத்தை அடுத்தக் கட்டத்துக்கு எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து பண்டைய இதிகாசங்களில் இடம் பெறும் உதாரணப் புருஷர்களை மேற்கோள் காட்டி விளக்கி சொல்லப்படுகிறது.  கடைசி நாள் நிகழ்ச்சியாக தி ஹார்மோனி (நிறைவான மகிழ்ச்சி) நடக்கிறது. இதில் தனிப்பட்ட வாழ்க்கை, பொது வாழ்க்கை, அலுவலக வாழ்க்கை மூன்றிலும் சமநிலையை கடைபிடித்து வெற்றி பெறுவது எப்படி என்று சொல்லித் தரப்படுகிறது.

வேட் ஃப்ரான்ஸன்

கருத்தரங்கில் நான் (விஜய் ஆனந்த் ஸ்ரீராம்) மற்றும் வெளிநாட்டு பேச்சாளர் வேட் ஃப்ரான்ஸன் முக்கியமாக உரையாற்றுகிறோம். வேட் ஃப்ரான்ஸன், பன்மொழி திறமையாளர். இவரின் தி பீப்பிள் ஆஃப் தி சைன் என்கிற நூல், புதிய வெளியீடுகளில் அமேசான்.காமில் அதிகம் விற்கப்பட்டவையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த நிகழ்வின் போது இந்தியாவில் இவரின் தி ஹார்ட்நெஸ் ஆஃப் தி ஹார்ட் நூல் வெளியிடப்படுகிறது. நான் கிழக்கத்திய இதிகாசங்களிலிருந்தும் வேட் ஃப்ரான்ஸன் மேற்கத்திய இதிகாசங்களிலிருந்தும் மேலாண்மை உத்திகளை நவீன மேலாண்மையில் எப்படி பயன்படுத்தி வெற்றி பெறுவது என்பது பற்றி பேசுகிறோம். இது இப்போதுள்ள நடைமுறை பிரச்னைகளுக்கு நிச்சயம் தீர்வாக அமையும். இந்தக் கருத்தரங்கம் குறித்து அதிக விவரங்களை http://www.ripeacademy.org/-ல் தெரிந்து கொள்ளலாம். உலகளாவிய தன்னார்ந்த தெளிவு நிலை விளைகிற அனைவரும் அவசியம் கலந்துக் கொள்ள வேண்டிய கருத்தரங்கம் இது." என்றார்.

- சி.சரவணன்
படம்: சொ.பாலசுப்பிரமணியன்
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ