Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 97 புள்ளிகள் ஏற்றம்!

இன்று காலை தொடங்கிய இடைக்கால பட்ஜெட்டில், மோட்டார் துறைக்கு உற்பத்தி வரிகள் குறைக்கப்பட்டதையடுத்து, இன்று  (17-02-2014)  அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 61.85 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேசமயம் இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்த. இதையடுத்து பங்கு சந்தையின் சென்செக்ஸ் 97 புள்ளிகள் அதிகரித்து 20,464 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 24 புள்ளிகள் அதிகரித்து 6,073 ஆக முடிவடைந்தது.
இதையடுத்து மோட்டார் வாகன துறை பங்குகள் ஏற்றத்தில் முடிவடைந்தன. குறிப்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் அதிகரித்தும், எம் அண்ட் எம் நிறுவன பங்கின் விலை 2 சதவிகிதம் அதிகரித்தும், மாருதி சுசூகி நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தது.   
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ