Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 137 புள்ளிகள் ஏற்றம்!

நேற்று முடிவடைந்த இடைக்கால பட்ஜெட்டில், முக்கிய வரிகள் ஏதும் மாற்றம் செய்யப்படாமல், குறிப்பாக மோட்டார் வாகன துறை மற்றும் மொபைல் போன்றவற்றின் உற்பத்தி வரிகள் குறைக்கப்பட்டது. இதையடுத்து இன்று (18-02-2014) அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு பெரிய அளவில் மாற்றம் இன்றி 62.08 ரூபாயாக உள்ளது. அதேசமயம் இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன.  இதையடுத்து பங்கு சந்தையின் சென்செக்ஸ் 137 புள்ளிகள் அதிகரித்து 20,601 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 41 புள்ளிகள் அதிகரித்து 6,114 ஆக உள்ளது.

 

 
குறிப்பாக ஐ.சி.ஐ.சி.ஐ பங்கின் விலை 2 சதவிகிதம் அதிகரித்தும், ஜெயப்பிரகாஷ் அசோசியேட்ஷ் நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP