Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியா இரண்டாவது இடத்தை பிடிக்கும்!

2016ம் ஆண்டிற்குள், சர்வதேச அளவில் உருக்கு உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் ஆண்டு உருக்கு உற்பத்தி திறன் 3.50 கோடி டன்னாக இருந்தது. அப்போது சர்வதேச அளவில் எட்டாவது இடத்தில் இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் உருக்கு துறையில் ஏற்பட்ட வளர்ச்சி மற்றும் விரிவாக்க நடவடிக்கைகள் காரணமாக தற்போது ஆண்டு உற்பத்தி திறன் 8.90 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் உருக்கு உற்பத்தியில் இந்தியா தற்போது நான்காவது இடத்தில் உள்ளது.
 
கர்நாடகா மற்றும் கோவா மாநிலங்களில் சுரங்க பணிகளுக்கு முன்னர் தடை விதிக்கபட்டிருந்தது. ஆனால் தற்போது கர்நாடகா மாநிலத்தில் சுரங்க பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவா மாநிலத்திலும் விரைவில் தடை நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ