Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்று குறையும் இந்த தங்கத்தின் மோகம்!

கடந்த 2012ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தங்கத்தின் தேவை 12.84 சதவிகிதம் அதிகரித்து 975 டன்னாக இருந்தது. குறிப்பாக 2013ம் ஆண்டின் முதல் பாதியிலேயே 620 டன் இறக்குமதி செய்யப்பட்டது. வருடபாதிக்கு பின்னர் மத்திய அரசு நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவிகிதம் கட்டாயம் ஏற்றுமதி செய்ய வேண்டும். அதேசமயம் இறக்குமதி வரியும் 2 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக அதிகரித்தது. போன்ற பல விதிமுறைகளை தங்கத்தின் இறக்குமதியை குறைப்பதற்காகவே மத்திய பல்வேறு நடவடிக்கையை எடுத்தது.ஆனால் இதனால் தங்க கடத்தல் தற்போது மிக அதிகரித்துள்ளது. இது சுமார் இருமடங்கு அதிகரித்து 150 & 200 டன் தங்கம் கடத்தல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அரசின் இந்த விதிமுறைகள் இன்னும் தளர்த்தப்படவில்லை. இது தொடரும் என்கிறது உலக தங்க கவுன்சிலின் இந்திய தலைமை அதிகாரி சோமசுந்தரம் கூறியுள்ளார். மேலும் தங்கத்தின் தேவை உலக அளவில் 2012ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 
குறிப்பாக உலக அளவில் காயின் மற்றும் பார்களில் செய்யப்படும் முதலீடு 1,654 டன்னாக அதிகரித்துள்ளது. இது 2012ல் 1,289 டன்னாக அதிகரித்துள்ளது. இது சுமார் 28 சதவிகிதம் அதிகமாகும். மேலும் சீனா மற்றும் இந்தியாவில் மட்டும் தங்க பார்கள் மற்றும் காயின்களில் முதலீடு செய்வது 38 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது 16 சதவிகிதமாக முன்னர் இருந்தது. அமெரிக்காவில் பார்கள் மற்றும் காயின்கள் தேவை 26 சதவிகிதம் அதிகரித்து 68 டன்னாக உள்ளது. துருக்கியில் 113 சதவிகிதம் அதிகரித்து 102 டன்னாக தேவை இருந்தது. சர்வதேச அளவில் மொத்தம் 3,864 டன்னாக தேவை இருந்தது. இது 2012ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 21 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் தங்க ஆபரண நகைகள் தேவை 17 சதவிகிதம் அதிகரித்து 2,209 டன்னாக இருந்தது. 2009ம் ஆண்டிலிருந்து தொடந்து தேவை அதிகமாகவே இருந்து வருகிறது. 
 
இந்தியாவை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டு 612.7 டன்னாக தங்கத்தின் தேவை இருந்தது. இது 2012ல் 552 டன்னாகவே இருந்தது. மேலும் தங்கத்தின் மீதான முதலீட்டு தேவை 362.1 டன்னாக இருந்தது. இது முந்தைய ஆண்டு 2012ல் 312.2 டன்னாக இருந்தது. மொத்த தங்கத்தின் தேவை 974.8 டன்னாக இருந்தது. இது 2012ல் 864.2 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் மறு சுழற்சி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 113 டன்னாகும். இது 2012ல் 100.8 டன்னாக இருந்தது. என்று குறையும் இந்த தங்கத்தின் மோகம். 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ