Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 88 புள்ளிகள் ஏற்றம்!

சர்வதேச அளவில் வளர்ந்துவரும் சந்தைகளில் பொருளாதார சரிவால் அந்நிய முதலீடுகள் இந்திய சந்தைகளில் அதிகரித்து வருவதன் காரணமாக, இந்திய ரூபாயின் மதிப்பு, 62.20 ரூபாயாக சரிந்துள்ள போதிலும், இந்திய பங்கு சந்தைகள் இன்று (19-02-2014) ஏற்றத்தில் முடிவடைந்தன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 88 புள்ளிகள் அதிகரித்து 20,722 ஆக முடிவடைந்தது. நிஃப்டி 25 புள்ளிகள் அதிகரித்து 6,152 ஆக முடிவடைந்தது. 
 
இதையடுத்து டி.சி.எஸ் மற்றும் விப்ரோ நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும், ஜே.கே டயர்ஸ் நிறுவன பங்கின் விலை 2 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ