Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இணையதள வாடிக்கையாளர் எண்ணிக்கை 238 மில்லியனை தொட்டது!

இணையதள வாடிக்கையாளர் எண்ணிக்கை கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது 238.71 மில்லியனை தொட்டுள்ளது. குறிப்பாக மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, குஜராத் மற்றும் ஆந்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் வாடிக்கையாளர் எண்ணிக்கை வளர்ச்சியடைந்துள்ளது. 
மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 2011ல் 9.4 சதவிகிதம் வீடுகளில் கணினி உள்ளது. இதில் 3.1 சதவிகிதம் வீடுகளில் இணையதள வசதி உள்ளது. இதில் மஹாராஷ்டிரா அதிகளவு இணையதள வாடிக்கையாளர்களை கொண்ட மாநிலமாக உள்ளது. குறிப்பாக 38.78 மில்லியன் வாடிக்கையாளர்களையும், உத்தரபிரதேச மாநிலம் 22.90 மில்லியன் வாடிக்கையாளர்களையும், தமிழ்நாடு 19.65 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு மூன்றாவது இடத்திலும் உள்ளது. குஜராத் மாநிலத்தில் 17.92 மில்லியன் வாடிகையாளர்களையும், ஆந்திர மாநிலம் 17.07 மில்லியன் வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது.  
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ