Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழ்நாடு வருமான வரித்துறைக்கான புதிய இணையதளம்..

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரிக்கான பிரத்யேக வருமானவரி திய இணையதளம் நேற்று தொடங்கப்பட்டது.
 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித்துறைக்கான புதிய இணையதளம் (http://www.tnincometax.gov.in/)  நேற்று (பிப்ரவரி 19ஆம் தேதி) சென்னை வருமானவரி அலுவலகத்தில் தொடங்கப்பட்டது.

இதை சென்னை வருமானவரி துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவி தொடங்கி வைத்தார்.



அவர் கூறும் போது , ''இந்த இணைய தளத்தில் வருமான வரி சம்பந்தமான குறிப்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான அனைத்து உத்தரவுகள், சுற்றறிக்கைகள், பயிற்சி வகுப்புகள், செய்திகள், நடப்புகள், மேல்முறையீட்டு வழக்குகள், வருமான வரி மதிப்பீடு அதிகாரிகள் பற்றிய விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

மேலும், வருமானவரி தொடர்பான சலுகைகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. டெண்டர்கள் உள்ளிட்ட படிவங்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

வருமானவரி துறை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மற்றும் இணையதள முகவரியையும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் வருமான வரி துறைக்கும், பொதுமக்களுக்கும் பணிகள் சுலபமாகும். தற்போது இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

ஒரு சுற்றறிக்கையை ஒவ்வொரு வருமான வரி அதிகாரிக்கும் தனி தனியே அனுப்புவதற்கு பதிலாக இந்த இணை யதளத்தில் பதிவேற்றம் செய்தால் போதும். அனைத்து அதிகாரிகளும் உடனடியாக தெரிந்து கொள்ளலாம். அந்த விஷயத்தை உடனடியாகவும் அமல்படுத்த முடடியும். வருமான வரித் துறை நிர்வாகம் வெளிப்படையாக இருக்க இந்த இணையதளம் உதவிகரமாக இருக்கும். மேலும், வருமான வரி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த இணைய தளம் உதவும்'' என்றார்.

- சி.சரவணன்

படங்கள்: ஜெ.வேங்கடராஜூ

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ