Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 170 புள்ளிகள் ஏற்றம்!

சர்வதேச அளவில் வளர்ந்துவரும் சந்தைகளில் பொருளாதார சரிவால் அந்நிய முதலீடுகள் இந்திய சந்தைகளில் அதிகரித்து வருவதன் காரணமாக, இந்திய ரூபாயின் மதிப்பு, 62.13 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று (21-02-2014) இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 170 புள்ளிகள் அதிகரித்து 20,708 ஆக உள்ளது. நிஃப்டி 52 புள்ளிகள் அதிகரித்து 6,144 ஆக உள்ளது. 
 
இதையடுத்து ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP