Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியா ‘‘அன்இன்க்’’

முன்தினம் சென்னையில் மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அஸோசியேஷன் நடத்திய புத்திக வெளியீட்டு விழாவில் ஐஐஎம் பெங்களூருவில் பேராசிரியராக பணிபுரியும் வைத்தியநாதன் அவர்கள் எழுதிய ‘‘இந்தியா அன்இன்க்’’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.இந்த புத்தகத்தை வெளியிட்டு பேசிய பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக்குழு தலைவர் ரங்கராஜன் அவர்கள் ‘‘ இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனங்கள் பெரிய அளவில் பொருளாதார பங்களிப்பை அளித்தாலும், ஒருங்கிணைக்கப்படாத சிறு வியாபாரங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, இவர்களை நெறிமுறைபடுத்து சரியான வழிகாட்டுதல், வங்கி சேவை வசதி ஆகியவற்ரை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் இவர்களது வாழ்க்கை தரம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை பெருமளவு உயர்த்தமுடியும் என்று கூறினார்.
 
 
மேலும் இந்த புத்தகம் இந்தியாவின் பழமையான தொழில் முறைகள், சிறு தொழில்கள் தரும் இலாபம், சிறு தொழிகளின் நிலை என் பல விஷயங்களை எடுத்துரைக்கும், இது இந்தியாவின் ஒருங்கிணைக்கபடாத தொழில்துறையை அறியும் புத்தகமாக இருக்கும் என இந்த புத்தகத்தின் ஆசிரியர் வைத்தியநாதன் கூறினார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close