Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ் - அமெரிக்க வரண்டி குழுமத்துடன் கூட்டு ஒப்பந்தம்!

இந்தியாவில் முதன் முறையாக ஒரு குடையின் கீழ் அனைத்து ஆட்டோமொபைல் வாகனங்களுக்கும் வாரண்டி சேவை 
 
முதல் ஆண்டில் 50,000 வாகனங்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வாகனங்களுக்கும் வாரண்டி சேவை வழங்க இலக்கு நிர்ணயம்.
 
 
இந்தியாவில் வாகன சேவையில் முன்னணி நிறுவனமான டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ், அமெரிக்காவைச் சேர்ந்த தி வாரண்டி குரூப் நிறுவனத்துடன் இணைந்து கார், டிரக், டிராக்டர், இலகு ரக மற்றும் கனரக வாகனங்கள் என  அனைத்துத் தரப்பு ஆட்டோமொபைல் வாகனங்களுக்கும் முழுமையான வாரண்டி சேவை வழங்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் சந்தையைப் பயன்படுத்தி முதல் ஆண்டில் 50,000 வாகனங்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளில்10 லட்சம் வாகனங்களுக்கும் வாரண்டி சேவை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
 
டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ் நிறுவனம், தனது புகழ்பெற்ற மைடிவிஎஸ் பிராண்ட் மூலம் தனது சேவைகளை வழங்கி வருகிறது. இந்தச் சேவை மூலம் ஏற்கனவே வாரண்டி சேவையையும் இந்நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
 
சர்வதேச  அளவில் பிரசித்தி பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்திய வாடிக்கையாளர்களுக்குத் தலைசிறந்த சேவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள மைடிவிஎஸ், ஏற்கனவே சென்ற ஆண்டு ‘மையர்ஸ் டயர் சப்ளை’ எனும் அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
 
ஒப்பந்தத்தை அறிவித்துப் பேசிய, டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்,  ஆர். தினேஷ் கூறுகையில் “டிவிஎஸ்ஸின் இந்திய ஆட்டோமொபைல் சந்தை பற்றிய அனுபவமும், வாரண்டி குரூப் நிறுவனத்தின் தேர்ந்த செயல்பாடும் இந்தக் கூட்டு ஒப்பந்தத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. மேலும், இந்தக் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம,  இந்த வாரண்டி வர்த்தகத்தை ஆசியாவில் டிவிஎஸ் நிறுவனத்திற்கு ஏற்கனவே கிளைகள் உள்ள பல நாடுகளுக்கும் கொண்டு செல்ல முடியும்” எனத் தெரிவித்தார்.
 
வாரண்டி குரூப் நிறுவனத்தின் தலைவரும், முதன்மை செயல் இயக்குநருமான டாம் வார்சோப், கூறுகையில் “டிவிஎஸ் மற்றும் வாரண்டி குரூப் ஆகிய இரண்டு நிறுவனங்களின் தனித் தன்மையும் பலமும் இந்தக் கூட்டணி மூலம் ஒன்று சேர்ந்துள்ளது. டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையளார்கள் பற்றிய கணிப்பும் மேலாண்மை திறனும், வாரண்டி குரூப் நிறுவனத்தின் உலக அளவில் செயல்படுத்தி வரும் வாரண்டி சேவை திறனும் சேர்ந்து இந்திய வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவை வழங்க முடியும்.” என தெரிவித்தார்.
 
டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர்,  சஞ்சய் நிகாம் கூறுகையில், “வாரண்டி குரூப் நிறுவனத்துடன் கூட்டணி வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களின் தொழில்நுட்பமும், புதிய சேவைகளும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தைத் தரும். இந்தக் கூட்டணி மூலம் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கச் சேவை செய்து அவர்களது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை மேம்படுத்தவும் தக்கவைத்துக் கொள்ளவும் உதவுவோம்” எனத் தெரிவித்தார்.
 
இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய வாகன உரிமையாளர்களுக்கு வாரண்டி சேவை மூலம் பிரச்சனைகள் அற்ற சேவைகளை வழங்கிட முடியும்.வர்த்தக நிறுவனங்களுக்கான பயன்கள்
 
1.உலக அளவில் பலதரப்பட்ட நிறுவனங்களுடன் பணிபுரிந்த வாரண்டி குரூப் தனது அனுபவம் மற்றும் பகுத்தாய்வு மூலம், உற்பத்தியாளர்களுக்குத் தொடர்ந்து சிக்கல் ஏற்படும் பாகங்களைச் சுட்டிக் காட்டி தரத்தை மேம்படுத்த உதவும்:
 
2.உற்பத்தியாளர்கள் வாரண்டி சேவையை மொத்தமாக டிவிஎஸ்- வாரண்டி குரூப் கூட்டணியிடம் ஒப்படைத்து விட்டு, உற்பத்தியில் கவனம் செலுத்த முடிவதோடு, வாரண்டி சேவையில் முறைகேடுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்
 
3. சர்வதேச சேவை இந்தியா முழுவதும் கிடைக்கும் வாய்ப்பு
 
4.உற்பத்தியாளர்கள் வாரண்டி சேவை மூலம் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு
 
5.வாரண்டி சேவையை 24*7 அவசர காலச் சேவையோடு இணைத்து எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பு
 
6.உலக அளவில் பிரசித்தி பெற்ற சேவைகளை இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வாய்ப்பு
 
வாடிக்கையாளர்களுக்கான பயன்கள்
 
1.நீட்டிக்கப்பட்ட வாரண்டி பெறுவதன் மூலம், வாகனம் பழுது அடைவது பற்றியோ ரிப்பேர் செலவு பற்றியோ கவலை கொள்ளத் தேவையில்லை.
 
2.வாகனத்தின் விற்பனை விலையைக் கூட்டுகிறது
 
3.பழைய வாகனங்களின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது.
 
டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ் பற்றிய குறிப்பு
 
100 ஆண்டுக் காலப் பெருமை வாய்ந்த டிவிஎஸ் அண்டு சன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ் நிறுவனம், கடந்த 10 அண்டுகளுக்கும் மேலாக ஆட்டோமொபைல் சேவையில் முதன்மையாகச் செயல்பட்டு வருகிறது.
கடந்த 2011ம் ஆண்டு இது தனி நிறுவனமாக உருவெடுத்தது.
 
டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸின் வர்த்தகங்கள்:
 
1. இந்தியாவில் 79 கிளைகளுடன் இயங்கும் அனைத்து ரகக் கார் சேவை
 
2.நாடு முழுவதும் 4000 அங்கீகரிக்கப்பட்ட சேவையாளர்களைக் கொண்டு செயல்படும் 24*7 அவசரகாலச் சாலையோர சேவை
 
3.வாரண்டி சேவை
 
4.டெலிமேடிக்ஸ்
 
5.காப்பீடு சேவை மேலும் விவரங்களுக்கு www.mytvs.in
 
வாரண்டி குரூப் பற்றிய குறிப்பு:
 
50 ஆண்டுகளாக வாரண்டி சேவையில் முதன்மையாக விளங்கி வரும் இந்நிறுவனம் உலக அளவில் பல்வேறு வாரண்டி சேவைகளையும் அது சார்ந்த பயன்களையும் அளித்து வருகிறது. 32 நாடுகளில் 1900 பணியாளர்களைக் கொண்டி இந்நிறுவனம் இயங்கி வருகிறது. உற்பத்தியாளர்கள், சில்லரை வாடிக்கையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும்,ஆட்டோ மொபைல், வீட்டு உபயோக சாதனங்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் என அனைத்து முக்கியப் பொருட்களுக்கும் தனது வாரண்டி சேவையை வழங்கி வருகிறது.
 
மேலும் விவரங்களுக்கு www.thewarrantygroup.com
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ