Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிட்னியில் சிதம்பரம் : ஜி20 கூட்டம்

இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இரண்டு நாள் ஜி-20 கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று சிட்னி சென்றுளார்,இந்த கூட்டத்தில் மத்திய வங்கி கவர்னர்கள் மற்றும் நிதி அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் சிதம்பரம் வரித் தகவல்கள் பற்றிய தானியங்கி பகிர்வு பிரச்சனை மற்றும் கூடுதலான வெளிப்படை தன்மை ஆகியவை குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.இந்த கூட்டத்தில் பங்கேற்க நிதி அமைச்சர் தவிர, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மற்றும் நிதி அமைச்சக செயலாளர் அரவிந்த் மற்றும் உயர் அதிகாரிகள் குழு சிட்னி சென்றுள்ளது.
மேலும் இந்தக் கூட்டத்தில் இந்திய நிதியமைச்சர் உலகப் பொருளாதாரம், முதலீடு, நிதி கட்டுப்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு நிதி தொடர்பான பிரச்சனைகளை எழுப்புவார் என்றும் கூறப்படுகிறது.. இந்தக் கூட்டம் தவிர நியூ சவுத் வேல்ஸ் அரசுடன் ஒரு கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் வரும் பிப்ரவரி 25ம் தேதி நாடு திரும்புவார் என்று கூறிப்பட்டுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ