Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிறுவன செகரடரி தொழிற்துறை படிப்பு: ஐ.சி.எஸ்.ஐ

காமர்ஸ் படிப்பவருக்கான தொழிற்படிப்புகளாகக் கருதப்படுவது சி.ஏ., கம்பெனி செகரடரிஷிப், ஐ,சி.டபிள்யூ.ஏ., போன்றவை. இதில் கம்பெனி செகரடரிஷிப் படிப்பும் சிறப்பான வேலை வாய்ப்புகளைத் தரக்கூடியது. ஒரு நிறுவனத்திற்கான சட்ட பூர்வமான ஆலோசனைகளை தருவது கம்பெனி செகரடரி தான்.

 

 
50 லட்சத்திற்கு மேல் நிலையான ஷேர் முதலீட்டைக் கொண்டிருக்கும் நிறுவனம் ஒவ்வொன்றும் கம்பெனிஸ் ஆக்ட் எனப்படும் கட்டாய விதிகளின் படி ஒரு கம்பெனி செகரடரியை தனது பணியில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். பல்வேறு துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, வணிக விதிகளை நன்றாக அறிந்திருப்பது, திறமையான மேலாண்மை ஆகியவற்றில் கம்பெனி செகரடரி தான் முக்கிய பங்காற்றுகிறார்.
 
இந்தியாவில் இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரடரிஸ் ஆப் இந்தியா என்னும் அமைப்பு தான் இந்தத் தொழிற்படிப்பை நடத்துகிறது. இதில் 3 நிலைகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதைப்பற்றிய விவரங்கள் மேலும் தெரிந்துகொள்ள    ஷ்ஷ்ஷ்.வீநீsவீ.மீபீu.   இணையதளத்தை பார்க்கலாம். 
* அடிப்படைப் படிப்பு (Foundation Course)
* இடைநிலைப் படிப்பு (Intermediate Course)
* முதன்மைப் படிப்பு (Final Course)
இந்த 3 படிப்புகளையும் வெற்றிகரமாக முடிப்பவர் பின்பு கம்பெனி செகரடரியாகப் பணியாற்றலாம். 
 
அடிப்படைப் படிப்புக்கு பிளஸ் 2 முடித்திருப்பவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். முன்பு இது பட்டப்படிப்பு தகுதியாக இருந்தது.அடிப்படைப் படிப்புக்கான தேர்வில் வெற்றி பெறுபவர்கள் இடைநிலைத் தேர்வில் கலந்து கொள்ளலாம். பட்டப்படிப்பு முடித்திருப்பவர்கள் அடிப்படைப் படிப்பை விட்டுவிட்டு இதில் நேரடியாகச் சேரலாம்.  இந்த படிப்புகளில் சேர மாணவர்கள் நல்ல திறமையுடன் இருந்தால் போதும், இந்தியாவில் இந்த படிப்பினை பற்றி விழிப்புணர்வு குறைவாகவே இருந்து வருகிறது. எனினும் இந்த படிப்பிற்கான வேலை வாய்ப்புகள் நல்ல முறையில் உள்ளது.அதேசமயம் சம்பள விகிதமும் நன்றாக உள்ளது என்கிறார் இந்நிறுவனத்தின் தலைவர் ஆர்.ஸ்ரீ தரன். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ