Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹெட்ஜிங்!

ஹெட்ஜிங் என்றால் என்ன?

பொதுவாக ஹெட்ஜிங் என்பது என்ன‘‘ ஒரு பொருள் வாங்கி வைத்திருக்கும் பொழுது அது லாபத்தில் செல்லும் பொழுது பிரச்சனையில்லை. அதே நஷ்டத்தில் செல்லும் பொழுது அதை என்ன செய்வது என்பது சிலருக்கு தெரியாது தவிப்பார்கள். அம்மாதிரியான சமயங்களில் வர்த்தகர்களுக்கு உதவி செய்வது ஹெட்ஜிங் தான்.  
 
 
பங்கு சந்தை மற்றும் கமாடிட்டி, கரன்சி வர்த்தகங்களின் பொழுது திடீர் பொருளாதார நிகழ்வுகளின் பொழுது பங்கு சந்தைகளிலோ அல்லது கமாடிட்டி வர்த்தகத்தின் போது  சந்தை திடீரென சரிவடையும் பட்சத்தில் ஹெட்ஜிங் என்ற ஆப்சன் மூலம் மேற்கொண்டு வரும் நஷ்டத்தை தவிர்க்க முடியும்.  
                                               
எப்பொழுதும் கமாடிட்டி, கரன்சி மற்றும் பங்கு சந்தை வர்த்தகர்கள் ஏதாவது முக்கிய பொருளாதார நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புகள், கச்சா எண்ணெயின் இருப்பு மற்றும்  இயற்கை எரிவாயு இருப்பு பற்றிய அறிவிப்புகள் வெளியாகின்றன.  மேலும் பல பொருளாதார  தரவுகள் இருக்கும் பொழுது டெக்னிக்கல் ஆய்வுகள் அடிப்படையில் பங்கு சந்தைகளில் தினசரி வர்த்தகத்திலோ அல்லது அதனுடைய மற்றும் கரன்சி மற்றும்  கமாடிட்டி ப்யூச்சர் கான்ட்ராக்ட் வர்த்தகத்திலோ வாங்கியோ அல்லது விற்றோ கையில் ஓபன் பொசிசன் வைத்திருப்பது அதிக அளவில் ரிஸ்க் எடுப்பதாகும். ஒன்று அந்த நேரங்களில் எந்த பொசிசனும் இல்லாமல் இருப்பது நல்லது. அல்லது ஹெட்ஜ் செய்தாவது பெரிய அளவில் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்க வேண்டும் அல்லது குறைந்த பச்சம் ஸ்டாப்லாஸ் ஆர்டரையாவது வைப்பது மிகவும் நல்லது.
 
வர்த்தகத்தை பொருளாதார நிகழ்வுகள் முன்னரே வர்த்தகத்தை முடித்து கொள்ளவேண்டும். அவ்வாறு வாங்கி விற்க முடியாத பட்சத்தில் ஆர்டரை ஹெட்ஜ் செய்யலாம். ஹெட்ஜிங் என்பது பல வகையில் உள்ளது. அவற்றில் சில உதாரணமாக ராஜா என்பவர் காப்பரில் பிப்ரவரி மாதத்தில் வாங்கியுள்ளார். ஆனால் சீனாவின் உற்பத்தி குறித்த டேட்டா வெளியானதையடுத்து காப்பரின் திடீரென குறைய ஆரம்பித்தது. அச்சமயத்தில் ராஜா செய்வதறியாது என்ன செய்யலாம் என்று கேட்டபோது, காப்பரையே மார்ச் மாதத்தில் விற்க சொல்லி அறிவுரை சொல்லப்பட்டது. அவரும் மார்ச் மாதத்தில் விற்றார். அவர் விற்கும்போது சுமார் ரூ.1000 நஷ்டத்தில் இருந்தது. ஹெட்ஜிங் செய்ததில் அவருக்கு மேற்கொண்டு நஷ்டம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. வர்த்தகம் சீரான நிலைக்கு வந்த பின்னர் விற்றதை வாங்கியும், வாங்கியதை லாபத்திற்கு வந்த பின்னரே விற்றார். இப்போது அவருக்கு இரு நிலைகளிலும் லாபம் தான். ஆக வர்த்தகத்தில் இது ஒரு வகையான ஹெட்ஜிங். இதை இன்டர்கமாடிட்டி ஹெட்ஜிங் என்பார்கள். 
 
மேலும் துறை விட்டு துறை ஹெட்ஜிங் செய்யலாம். அதாவது பங்கு சந்தையில்
 
சர்க்கரை பற்றிய பங்குகள் வாங்கியிருப்பார்கள். ஆனால் வர்த்தகம் சரியில்லாத
 
பட்சத்தில் சர்க்கரையை பிசிகலாகவும் ஸ்பாட் சந்தைகளில் வாங்கி
 
வைத்திருப்பார்கள். இதை இன்ட்ரா கமாடிட்டி ஹெட்ஜிங் என்பார்கள். ஹெட்ஜிங்
 
என்பது சிறு முதலீட்டாளர்களூக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். மேலும் ஹெட்ஜிங்
 
செய்யும் பட்சத்தில் மார்ஜின் தொகையானது பாதியளவு செலுத்தினாலே போதும்.
 
சரியான முறையில் ஹெட்ஜ் செய்து நஷ்டத்தை குறைத்து கொண்டு வர்த்தகத்தை நல்ல முறையில்
 
செய்ய முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்கிறார் ஐஃபின் நிறுவனத்தின் சீனியர் டீலர் வி.ஆர்.
 
ஸ்ரீனிவாசன்.  
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ