Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மின்சார செலவை குறைப்பதற்காக சோலாருக்கு மாறும் டெல்லி மெட்ரோ!

மின்சார செலவை குறைக்கும் நடவடிக்கையாக டெல்லி மெட்ரோ இரயில் நிலையங்கள் சோலார் மயமாக்கபடுவதாக டெல்லி மெட்ரோ இரயில் நிலைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
இதன் முதற்கட்டமாக துவாரகா 21 இரயில் நிலைய கூரையில் சோலார் மின் உற்பத்தி தகடுகள் பொருத்தப்பட்டு அந்நிலையத்திற்கு தேவையான மின்சாரம் தயாரிக்கபடும் என்றும், மேலும் இது மற்ற இரயில் நிலையங்களுக்கும் விரிவு படுத்தபடும் என்றும் தெரிவித்துள்ளது, சோலார் உற்பத்தி இன்னும் ஆறு மாதத்திற்குள் தன் உற்பத்தியை தொடங்கும்,மேலும் இது 500 கிலோவாட் உச்ச மின் திறனை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது என கூறப்பட்டுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ