Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிப்ரவரி 25ல் வேலைநிறுத்தம்: சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் அறிவுறுத்தல்

சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி மத்திய பெட்ரோலிய மற்றும் எரிவாயுத்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கைகள் ஏற்கபடாவிட்டால் பிப்ரவரி 25ம் தேதி வேலைநிறுத்ததில் குதிக்க போவதாக எல்பிஜி விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தெரிவுத்துள்ளது.

கோரிக்கைகளில் மானியங்களை தனியார் வங்கிகள் மூலம் அளித்தலில் உள்ள சிக்கல், மாறுபட்ட பலவிலை நிர்ணயம், சிலிண்டர்கள் மீது திருட்டை தடுக்கும் முத்திரை இடதல், தடையற்ர விநியோகம் முறை, சிறு சிலிண்டர்களின் விற்பனை, புதிய விநியோகஸ்தர்களை நியமித்தல் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளது, இதில் சுமூக தீர்வு ஏற்படாத பட்சத்தில் வேலைநிறுத்தம் தொடங்கப்படும் என இக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ