Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 20,906 ஆக ஏற்றம்!

தொடர் ஏற்றத்தை கண்ட இந்திய பங்கு சந்தைகள், எஃப் அண்ட் ஓ பிப்ரவரி மாத எக்பெய்ரியை அடுத்து இன்றும் (26-02-2014) ஏற்றத்தில் உள்ளன. இதையடுத்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றை விட சற்று குறைந்து 61.94 ரூபாயாக உள்ளது. அதேசமயம் பங்கு சந்தையின் சென்செக்ஸ் 52 புள்ளிகள் அதிகரித்து 20,906 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 14 புள்ளிகள் அதிகரித்து 6,214 ஆக உள்ளது.
 
 
குறிப்பாக எம் அண்ட்- எம் மற்றும் விப்ரோ போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும், கோல் இந்தியா, ஹிந்துஸ்தான் ஜிங்க், ஜெய் பிரகாஷ் அசோசியேட்ஸ் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 2 சதவிகிதம் குறைந்தும் உள்ளது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ