Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆவணங்களை சரியாக வைத்துக்கொள்ளுங்கள்!

வருமான வரி தாக்கல் செய்யாத 21.75 லட்சம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த 21.75 லட்சம் பேரில். ஏற்கனவே ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்த சுமார் 50,000த்திற்கும் மேற்பட்டோருக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. இதனால் முன்னரே ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்தவர்கள் அதற்கு தகுந்த ஆதாரங்களை வைத்துக்கொள்வது நல்லது.  
\
 
கடந்த பிப்ரவரி2013ல் வருமான வரி தாக்கல் செய்யாத 12.19 லட்சம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நடவடிக்கை மூலம் 12.19 லட்சம் பேரில் 44 சதவிகிதம் பேர் வருமான வரி (5,36,220 பேர்) தாக்கல் செய்ததன் மூலம், 5,36,220 பேரின் மூலம் (சராசரியாக தலா 35,733 ரூபாய்) வரி 1,017.87 கோடி ரூபாய் கட்டப்பட்டுள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ