Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிராமங்களில் eKYC மூலம் வங்கி கணக்குகள்: ஆக்ஸிஸ் பேங்க்

 கிராமப்புறங்களில் ஆதார் அட்டையை அடிப்படையாகக் கொண்டு எலக்ட்ரானிக் சாதன உதவியுடன் வணிக தொடர்பாளர்கள் மூலம் வங்கி கணக்குகள் தொடங்கப்படும் என ஆக்ஸிஸ் பேங்க் அறிவித்துள்ளது. 

 

 
மேலும் வணிக தொடர்பாளர்கள் மூலம் சிறு எலக்ட்ரானிக் சாதனத்தை பயன்படுத்தி கிராம மக்களுக்கு பயனளிக்கும் சிறு- ஏடிஎம் சேவையை தொடங்கியுள்ளது, இதன் முதற்கட்டமாக ஆந்திராவில் இந்த சேவையை ஆக்ஸிஸ் வங்கி அறிமுகபடுத்தியுள்ளது. இதன் மூலம் கிராமத்தில் ஒருவர் 24 மணி நேரத்தில் கணக்கை துவங்க முடியும் என்றும், இன்னும் 3 மாதத்திற்குள் இந்த சேவை மூலம் ஒரு லட்சம் கணக்குகள் துவங்கப்படும் என்று ஆக்ஸிஸ் வங்கியின் சிறு வணிக வங்கி பிரிவு தலைவர் இராஜிவ் ஆனந்த் தெரிவித்தார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ