Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ப்ரீபெய்ட் ரெமிடென்ஸ் கார்ட்: பாதுகாப்பான ரொக்கம் செலுத்துதல்

- சுதேஷ் கிரியான், துணைத் தலைவர் மற்றும் பிசினஸ் ஹெட்,
எக்ஸ்பிரஸ் மணி

கமலா (65), திருநெல்வேலி மாவட்டம் ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியை. துபாயில் டெக்னிஷியனாக பணியாற்றி வரும் அவரது மகன், தாயின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் மாதந்தோறும் உடனடி ரொக்கப் பரிமாற்றம் மூலமாக வீட்டுக்கு பணம் அனுப்பி வருகிறார். இந்தப் பணத்தைப் பெற கமலா நாயர், தனது வீட்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்ய வேண்டும். இந்த முகவரின் அலுவலகம் காலை 10 மணி முதல மாலை 5 மணி வரை திறந்திருக்கும். அந்த இடத்திற்கு செல்லும் போக்குவரத்தும், அலுவலக நேரமும் ஒத்துப் போகாமல் கமலா சிக்கல்களை சந்தித்து வருகிறார்..இந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு வசதியான மாற்று வழிகள் ஏதேனும் உள்ளதா?

சுதேஷ் கிரியான், எக்ஸ்பிரஸ் மணி

உடனடி ரொக்கப் பரிமாற்றம் அதன் விரைவு காரணமாக செலுத்தப்பட்ட ரொக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்கு விரும்பத்தக்க முறைதான். எனினும் இந்த முறையில் முகவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்வதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும் என்பதால் இதில் சிக்கல்கள் காணப்படும். இதற்கான மாற்று வழிமுறைகளை கண்டறிய உலகம் முழுவதும் உள்ள சில முக்கிய ரொக்கப் பரிமாற்ற நிறுவனங்கள் ரொக்கத்தைப் பெறவும், அடிமட்ட அளவில் வங்கி சேவைகள் வசதியை ஏற்படுத்தவும் புதுமையான வழிமுறைகள் மற்றும் தீர்வுகளை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
 

இத்தகைய புதுமைகளில் ஒன்றுதான் ப்ரீபெய்ட் ரெமிடென்ஸ் கார்ட். இந்த கார்ட் பணம் பெறுபவர்கள் அதனை ஏடிஎம்களில் இருந்து எடுத்துக் கொள்ளவும், பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறும் போது கார்ட் மூலமாக நேரடியாக செலுத்தவும் உதவுகிறது. இது பணம் பெறுவோருக்கு விரைவான சேவை, பாதுகாப்பு மற்றும் வசதி ஆகியவற்றை அளிக்கிறது.
 

ப்ரீபெய்ட் ரெமிடென்ஸ் கார்ட்டை வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இன்றி பெற்றுக் கொள்ளலாம். பணம் செலுத்துபவர் வெளிநாட்டில் பணத்தை செலுத்தியவுடன் அது ப்ரீபெய்ட் கார்டில் தானாக வந்துவிடும். எனவே முகவர் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமோ அல்லது ரொக்கத்தைப் பெற நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமோ கிடையாது.
 

இத்தகைய வசதிகளுடன், இந்த ப்ரீபெய்ட் ரெமிடென்ஸ் கார்ட் சிறந்த பாதுகாப்பையும் செலவிடுவதற்கான புத்திசாலித்தனமான வழிமுறையையும் அளிக்கிறது. இந்த கார்ட் பின் எனப்படும் ரகசிய எண் அடிப்படையிலானது என்பதால் பணம் பெறும் பெரும்பாலான பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு திருட்டுக்கு எதிரான பாதுகாப்பையும் அளிக்கிறது. இந்த கார்ட் செலவிடப்பட்ட தொகை மற்றும் பரிவரத்தனை தொடர்பான தகவல்களை வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

இந்த கார்ட்டுக்காக கூடுதல் வருடாந்திர கட்டணமோ, மறைமுக கட்டணங்களோ அல்லது பணம் எடுப்பதற்கான கட்டணமோ கிடையாது என்பதால் ரொக்கப் பரிமாற்றத்திற்கு என்ன கட்டணமோ அதே கட்டணமே கார்டில் செலுத்துவதற்கும் வழிலிக்கப்படும்.
 

வரும் காலங்களில் ரொக்கப் பரிமாற்றத்திற்கு சிறந்த வழிமுறையாக திகழ்வதற்கான வாய்ப்புகள் ப்ரீபெய்ட் ரெமிடன்ஸ் கார்டுக்கு உள்ளது. இந்த புதுமையான வழிமுறையில் உள்ள வேகம், பாதுகாப்பு மற்றும் வசதி போன்ற பயன்கள், பயனாளிகளுக்கு தேர்ந்தெடுப்பதற்கான கட்டாயமான வாய்ப்பாக அமையும். இந்த கர்டின் பயன்பாடு சிறந்த செலவிடும் கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கும். அனைவரையும் உள்ளடக்கிய நிதி வளர்ச்சி மற்றும் ரொக்கமில்லா பொருளாதாரத்தை நோக்கி செல்வதற்கு இது முக்கியமான வழிமுறையாக அமைவதுடன் வசதியான மற்றும் உடனடி அணுகுதலையும் அளிக்கும்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ